Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய், விஜய்சேதுபதியுடன் நேருக்கு நேர் மோதும் கார்த்தி!

Webdunia
செவ்வாய், 27 ஆகஸ்ட் 2019 (17:50 IST)
விஜய் நடித்த 'பிகில்' , விஜய்சேதுபதி நடித்த 'சங்கத்தமிழன்' ஆகிய திரைப்படங்கள் ஏற்கனவே தீபாவளி தினத்தில் வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த பட்டியலில் கார்த்தியின் 'கைதி' திரைப்படமும் இணைந்துள்ளது
 
ஆம் கார்த்தி நடித்த 'கைதி' திரைப்படம் வரும் தீபாவளி ரிலீஸ் என படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த தகவலை கார்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து ரிலீஸ் தேதியை உறுதி செய்துள்ளார்.
 
இதற்கு முன் கடந்த 2011ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் விஜய் நடித்த 'காவலன்' மற்றும் கார்த்தி நடித்த 'சிறுத்தை' ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகின என்பதும் அதன்பின்னர் ஒரே நாளில் விஜய், கார்த்தி திரைப்படங்கள் ரிலீஸ் ஆவது வரும் தீபாவளி அன்றுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
மேலும் தீபாவளி பட்டியலில் இந்த மூன்று பெரிய படங்கள் மட்டுமின்றி தனுஷின் 'பட்டாஸ்' திரைப்படமும் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும், இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
 
விஜய்யின் 'பிகில்' வரும் தீபாவளி அன்று சோலோ ரீலிஸ் என எதிர்பார்த்த நிலையில் தற்போது மும்முனை போட்டியில் சிக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நாமளே ஒரு AI தான்.. நமக்கெதுக்கு இன்னொரு AI – இளையராஜா கருத்து!

மைல்கல் வசூலை எட்டிய விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’!

50 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றி நடை போடும் 'ஃபயர்'

ஹாட்ஸ்டாரில் ‘ஹார்ட் பீட்’ 2ஆம் சீசன்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ஒரு நாள் முன்னதாக அமெரிக்காவில் ரிலீஸ் ஆகும் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’!

அடுத்த கட்டுரையில்
Show comments