Webdunia - Bharat's app for daily news and videos

Install App

50% இருக்கைகள் அனுமதி: நாளை ‘கர்ணன் ரிலீஸ் ஆகுமா? ,

Webdunia
வியாழன், 8 ஏப்ரல் 2021 (15:20 IST)
தமிழக அரசு சற்றுமுன் கொரோனா வைரஸ் புதிய கட்டுப்பாடு விதிகளை வெளியிட்டது என்பதும் அதில் ஒன்று திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்று குறிப்பிடப்பட்டு இருந்தது என்பதையும் பார்த்தோம் 
 
இந்த நிலையில் நாளை ரிலீசாக உள்ள தனுஷின் ‘கர்ணன் உள்பட ஒரு சில திரைப்படங்களின் ரிலீஸ் கேள்விக்குறி என்ற தகவல் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ‘கர்ணன் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘கர்ணன் திரைப்படம் திட்டமிட்டபடி நாளை வெளியாகும் என்று அறிவித்து உள்ளார்
 
50 சதவீத இருக்கைகள் என்ற தமிழக அரசின் கட்டுப்பாட்டை ஏற்று, அந்த விதிகளின் படி ‘கர்ணன் படத்தை ரிலீஸ் செய்கிறோம் என்றும் இந்த படத்தை காண வரும் ரசிகர்கள் கொரோனா வைரஸ் விதிமுறைகளைக் கடைப்பிடித்து வரும்படி கேட்டுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த ட்விட்டை அடுத்து நாளை தனுஷின் ‘கர்ணன்  திரைப்படம் ரிலீஸாவது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இயக்குனர் ஆகிறார் டைட்டானிக் நாயகி கேட் வின்ஸ்லெட்.. அதிரடி அறிவிப்பு..!

சிவப்பு நிற உடையில் புனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

மாடர்ன் உடையில் ஸ்டைலாக போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் பட முன்பதிவில் சிம்பு ரசிகர்கள் செய்த குசும்பு!

சில்க் ஸ்மிதா தேடியது அவருக்கு வாழ்நாள் முழுவதும் கிடைக்கவில்லை.. இயக்குனர் ஜி எம் குமார் ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments