தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள கர்ணன் திரைப்படத்தின் டிரைலர் வெளியாக வாய்ப்பில்லை என சொல்லப்படுகிறது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ள இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பண்டாரத்தி புராணம் என்ற பாடலுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு எந்த அளவுக்கு வரவேற்பு இருக்கிறதோ அதே அளவுக்கு எதிர்ப்புகளும் எழ வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் தேவையில்லாத சர்ச்சைகளை தவிர்ப்பதற்காக படத்தின் டிரைலரை ரிலீஸ் செய்யாமலேயே படத்தை ரிலீஸ் செய்யலாம் எனப் படக்குழு முடிவு செய்துள்ளதாம்.