Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொன்னியின் செல்வன், விக்ரம் பிளாக்பஸ்டர் வசூல்களை முந்திய காந்தாரா?

Webdunia
திங்கள், 31 அக்டோபர் 2022 (10:14 IST)
காந்தாரா படத்தின் தெலுங்கு வெர்ஷன் மிகப்பெரிய வசூல் சாதனையைப் படைத்துள்ளது.

கேஜிஎஃப் திரைப்படத்தின் மூலம் பிரபலமான தயாரிப்பு நிறுவனமானது ஹோம்பலே பிலிம்ஸ். அடுத்து வரிசையாக பல திரைப்படங்களை தயாரித்து வருகிறது. அந்த வகையில் அவர்களின் அடுத்த வெளியீடாக கடந்த வாரம் வெளியான காந்தாரா திரைப்படம் நல்ல விமர்சனங்களைக் குவித்து வருகிறது.

இந்நிலையில் இப்போது ஐஎம்டிபி ரேட்டிங்கில் இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது. 9.5 மதிப்பெண்களுடன் முதல் இடத்தில் உள்ளது. இந்திய அளவில் ஜெய்பீம் திரைப்படம் 8.9 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், KGF 2 திரைப்படம் 8.4 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளன. இதற்கிடையில் இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய் வசூலை நெருங்கி வருவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் தெலுங்கு டப்பிங் வெர்ஷன் இதுவரை 45 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாம். இது பொன்னியின் செல்வன் மற்றும் விக்ரம் ஆகிய படங்கள் செய்த வசூலை விட அதிகம் என்று சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்த ஜேம்ஸ் பாண்ட் யார்?... பட்டியலில் மூன்று இளம் நடிகர்கள்!

சூர்யா 46 பயோபிக் இல்லை.. குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கும் – இயக்குனர் வெங்கட் அட்லூரி!

மீண்டும் இணையும் பிரேமம் கூட்டணி… இணையத்தில் வெளியான புகைப்படம்!

விஜய் சேதுபதி & நித்யா மேனன் நடிக்கும் தலைவன் தலைவி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சிம்பு - வெற்றிமாறன் கூட்டணிக்கு கண்டிஷன் போட்டாரா தனுஷ்? - வெற்றிமாறன் வெளியிட்ட வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments