Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டப்பிங் செய்யாத தர்பார்! கடுப்பான கர்நாடகா – பட ரிலீஸுக்கு எதிர்ப்பு!

Webdunia
திங்கள், 6 ஜனவரி 2020 (10:20 IST)
தர்பார் திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிட கூடாது என சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் தர்பார். மும்பை போலீஸ் கமிஷனராக ரஜினிகாந்த் நடித்துள்ள இந்த ஆக்‌ஷன் படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. கர்நாடகாவில் மட்டும் தமிழிலேயே வெளியாகிறது.

ஜனவரி 9ம் தேதி தர்பார் வெளியாக உள்ள நிலையில் கர்நாடகாவில் இந்த படத்தை வெளியிட எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஏற்கனவே கன்னட படங்கள் தவிர்த்த மற்ற மொழி படங்களை வெளியிட கன்னட அமைப்புகள் சில எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தர்பார் படம் நேரடியாக தமிழில் வெளியிட கூடாது. கன்னடத்தில் டப்பிங் செய்துதான் வெளியிட வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கர்நாடகாவில் படத்தை ரிலீஸ் செய்ய விநியோகஸ்தர்கள் தயார் செய்துள்ள நிலையில் இந்த எதிர்ப்பு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments