Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சினிமாவுல நடிக்கணும்னா அட்ஜஸ்ட் பண்ணு இல்லைனா போயிட்டே இரு!

Webdunia
செவ்வாய், 19 பிப்ரவரி 2019 (16:42 IST)
சினிமாத்துறையில் நடக்கும் அவலங்களை குறித்து நடிகை கனி குஸ்ருதி அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். 



 
பெண்களை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் சினிமாத்துறையில் அதிகமாக இருக்கிறது.
 
உலகம் முழுவதும் உள்ள பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல்களை மீடூ  என்ற ஹேஷ்டேக் மூலம் பதிவு செய்து பேரதிர்ச்சியை ஏற்பதினர்.  அந்த வகையில், இந்தியாவிலும் பெண்கள், தங்களின் பணியிடங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் நேர்ந்த பல்வேறு பாலியல் துன்புறுத்தல்களை மீடூ  ஹேஷ்டேக்கில் பதிவு செய்து தங்களுக்கு நேர்ந்த அவலங்களை வெளிப்படையாக தெரிவித்து, தவறாக நடக்க முயலும் ஆண்களுக்கு தக்க பாடத்தை புகட்டினர். 
 
இந்நிலையில், தமிழில் மா படத்திலும், பிசாசு படத்திலும் நடித்த கேரள நடிகையும், மாடல் அழகியுமான கனி குஸ்ருதி இந்த விவகாரம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.அதாவது , நான் திரைப்படங்களில் நடிக்க முயற்சி செய்த போது ஒன்றை புரிந்துகொண்டேன்.
 
ஒரு கலைஞரை யாரும் கட்டுப்படுத்தக்கூடாது. ஆனால், நான் சினிமா வாய்ப்பு தேடி திரைத்துறைக்குள் நுழையும்போது எனக்கு நிறைய கட்டுப்பாடுகளை விதித்தனர். என் பெற்றோர்கள் எனக்கு ஆதரவாக இருந்தனர். எனக்காக பேச எவரும் இல்லை. இந்த படத்தில் உங்கள் மகள் நடிக்க வேண்டுமானால் அட்ஜஸ்ட் செய்ய வேண்டும் என அம்மாவிடமே கூறினார்கள்.

சினிமா துறையில் பலரிடம் நிறைய தொந்தரவுகளை சந்தித்து விட்டேன். அட்ஜஸ் செய்யாமல் சினிமாவில் வாய்ப்புகளை பெறுவது மிகவும் கடினம்” என பலர் சொல்லி நான் கேட்டதைவிட நானே அதனை புரிந்துகொண்டேன் என கனி ஸ்ருதி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் க்யூட் புகைப்படங்கள்!

அனுபமா பரமேஸ்வரனின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக்ஸ்!

பா ரஞ்சித் படத்தில் கதாநாயகியான நாக சைதன்யாவின் மனைவி!

வழக்கு எண், மாநகரம் படங்களில் நடித்த ‘ஸ்ரீ’யா இது?.. அடையாளமே தெரியாத அளவுக்கு இப்படி ஆகிட்டாரே!

ரெட்ரோ என்பதற்கு இதுதான் அர்த்தம்… தலைப்புக்கு விளக்கம் கொடுத்த கார்த்திக் சுப்பராஜ்!

அடுத்த கட்டுரையில்