Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சந்திரமுகி 2 ஷூட்டிங்கை முடித்த கங்கனா.. படக்குழு பற்றி எமோஷனல் பதிவு!

Webdunia
வியாழன், 16 மார்ச் 2023 (08:06 IST)
2005 ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாக்கத்தில் உள்ளது.லாரன்ஸ், வடிவேலு, ராதிகா சரத்குமார் மற்றும் கங்கனா ரனாவத் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். மரகதமணி இசையமைக்கிறார். படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக மைசூரில் உள்ள ஒரு அரண்மணையில் படமாக்கி வருகிறார் பி வாசு. படத்தில் சந்திரமுகியாக நடிக்க பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஒப்பந்தம் ஆகியுள்ளார். தற்போது படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை படமாக்கி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். அது சம்மந்தமான புகைப்படங்களை எல்லாம் கங்கனா வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள பதிவில் சந்திரமுகி 2 படத்துக்கான தன்னுடைய காட்சிகளை நடித்து முடித்துள்ளார். இது சம்மந்தமாக எமோஷனலாக பதிவிட்டுள்ள அவர் “இந்த படக்குழுவுக்கு விடை கொடுப்பது மிகவும் கஷ்டமான ஒன்று. லாரன்ஸ் மாஸ்டர் ஒரு டான்ஸராக தனது பணியை தொடங்கி இன்று பிளாக்பஸ்டர் ஹிட்களைக் கொடுக்கும் ஒரு சூப்பர் ஸ்டாராக உயர்ந்துள்ளார்.  அன்பான மற்றும் தனித்துவமான மனிதர். அவருடன் பணிபுரிந்தது மிகவும் சிறப்பான அனுபவம்” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பொய் செய்தி.. எந்த விபத்தும் ஏற்படவில்லை.. நலமாக இருக்கிறேன்: யோகிபாபு

நடிகர் யோகிபாபு சென்ற கார் விபத்து.. திரையுலகினர் அதிர்ச்சி..!

மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஸ்!

நடிகராக அறிமுகமாகும் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன்…!

அடுத்த கட்டுரையில்
Show comments