Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தயவு செஞ்சு சோத்துல உப்பு போட்டு சாப்பிடாதீங்க..? – ரஜினிகாந்த் அட்வைஸ்!

Advertiesment
தயவு செஞ்சு சோத்துல உப்பு போட்டு சாப்பிடாதீங்க..? – ரஜினிகாந்த் அட்வைஸ்!
, ஞாயிறு, 12 மார்ச் 2023 (10:01 IST)
சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் உடல் ஆரோக்கியம் குறித்து வழங்கிய தகவல்கள் வைரலாகி வருகின்றன.

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். கருப்பு வெள்ளை படம் தொடங்கி தற்போதைய நவீன சினிமா வரை 169 படங்கள் நடித்துள்ள ரஜினிகாந்திற்கு மக்கள் மட்டுமல்லாமல் சக நடிகர்களே ரசிகர்களாக உள்ளனர். அப்படிப்பட்ட ரஜினிகாந்த் தனது இளம் வயதிலிருந்து புகைப்படிக்கும் பழக்கம் கொண்டவர் என்பது பலரும் அறிந்ததே. ஆனால் 2008ல் அவருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு பிரச்சினைக்கு பின் புகைப்பிடித்தல், மதுப்பழக்கம் உள்ளிட்டவற்றை விட்டார்.

சமீபத்தில் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் உடல் ஆரோக்கியம் குறித்து பேசிய அவர் “நிறைய மது அருந்தினால் சிறுநீரகம் பாதிக்கும், நிறைய புகைப்பிடுத்தால் நுரையீரல் பாதிக்கும். நிறைய துரித உணவுகள், எண்ணெய் உணவுகள் சாப்பிட்டால் இதயத்தை பாதிக்கும். ஆனால் உப்பு ஜாஸ்தி சாப்பிட்டால் அது மொத்த உடலையே பாதிக்கும். உப்பு ரொம்ப குறைத்தாலும் பிரச்சினைதான்.

இதற்கு ஒரு சம்பவம் சொல்கிறேன். ஒருமுறை என மனைவி லதா ஒரு திருமணத்திற்கு சென்றபோது அந்த விருந்து உணவு சுவையாக இருந்ததால் சமையல் செய்தவர் குறித்து விசாரித்துள்ளார். அந்த சமயம் எங்கள் வீட்டு சமையல்காரருக்கு உடல்நிலை சரி இல்லாததால் அந்த சமையல்க்காரரை பணிக்கு வைத்தோம்.

அவர் சமைத்த உணவுகள் அவ்வளவு ருசியாக இருந்தது. நாங்களும் நன்றாக சாப்பிட்டுக் கொண்டே இருந்தோம். ஆனால் எனக்கும், என் மனைவிக்கும் ரத்த அழுத்தம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. மருத்துவரிடம் சென்று சிகிச்சை எடுத்தும் ரத்த அழுத்தம் குறையவில்லை. அந்த சமயம் எங்கள் வீட்டுக்கு வந்த நண்பர் ஒருவர் அந்த சமையல்காரரின் சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு “என்ன இதில் இவ்வளவு உப்பு, ஆயில் இருக்கிறதே.. இதை எப்படி சாப்பிடுகிறீர்கள்?” என்று கேட்டார். அதன்பிறகுதான் அனைத்தையும் மாற்றினேன். பின்னர் என் ரத்த அழுத்தமும் குறைந்தது. உப்பு அதிகம் போட்டு சாப்பிட்டால் பின்னர் அதுவே பழகிவிடும்” என்று கூறியுள்ளார்.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பயப்படாம எழுதுங்க.. படிச்சதுதான் வரும்! – முதல்வர் மு.க.ஸ்டாலின் மாணவர்களுக்கு வாழ்த்து!