Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரண்மனை 4 வெற்றியால் காஞ்சனா 4 ஐ தூசு தட்டும் ராகவா லாரன்ஸ்!

vinoth
வியாழன், 6 ஜூன் 2024 (08:15 IST)
தனது திரை பயணத்தை துவங்கி டான்ஸ் மாஸ்டராக, நடிகராக,  சிறந்த இயக்குனராக வலம் வருகிறார். இவரது நடிப்பிலும் இயக்கத்திலும் விசித்திரமான பல வெற்றி படங்களை தமிழில் கொடுத்துள்ளார். அப்படங்களில் ஒன்று தான் அவரது இயக்கத்திலும் நடிப்பிலும் மாபெரும் வெற்றி பெற்ற “முனி”. இப்படத்தை தொடர்ந்து  இரண்டாம் பாகம் “காஞ்சனா” என்ற பெயரிலும்  பிறகு “காஞ்சனா-2 “ என வெளியான அனைத்து பாகங்களிலும்  லாரன்ஸ்  வெறித்தனமாக நடித்து உள்ளார். 

இதையடுத்து அவர் காஞ்சனா 3 படத்தை பிரம்மாண்டமாக 3டி தொழில்நுட்பத்தில் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் சில ஆண்டுகளாக இந்த படம் தொடங்கப்படாமல் கிடப்பில் கிடந்தது.

இந்நிலையில் சமீபத்தில் அரண்மனை 4 திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டாகியுள்ள நிலையில், இப்போது அவர் காஞ்சனா4 திரைப்படத்தை தொடங்கும் பணிகளை முடுக்கி விட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் செப்டம்பர் மாதத்தில் தொடங்கும் என சொல்லப்படுகிறது. இந்த படத்தை ராகவா லாரன்ஸே இயக்கி, தயாரிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் உடையில் ஸ்டைலான போஸ்களில் திவ்யா துரைசாமி… லேட்டஸ்ட் ஆல்பம்!

கிளாமர் உடையில் ஸ்டன்னிங்கான போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

யாருக்காக ஓடுகிறதோ இல்லையோ… இவருக்காக இந்தியன் 2 ஓடவேண்டும்- சித்தார்த் நெகிழ்ச்சி!

ஒருவழியாக தான் இயக்கவுள்ள கில்லர் படத்தின் வேலைகளைத் தொடங்கிய எஸ் ஜே சூர்யா!

ஓடிடி மற்றும் சாட்டிலைட் வியாபாரத்தில் சாதனை படைத்த ஜெயம் ரவியின் ‘பிரதர்’ திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments