Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரண்மனை 4 ஓடிடி ரிலீஸ் தேதியை அறிவித்த பிரபல ஓடிடி!

vinoth
வியாழன், 6 ஜூன் 2024 (07:40 IST)
தமிழில் நகைச்சுவை பேய்ப் படங்களின் வரிசையைத் துவக்கிவைத்ததில் 2014ல் வெளிவந்த அரண்மனை படத்தின் வெற்றிக்கு முக்கியப் பங்கு உண்டு. அப்போது தொடங்கிய அரண்மனை வரிசையின் மூன்று பாகங்கள் இதுவரை வெளியாகியுள்ளன.

இப்போது சுந்தர் சி லைகா தயாரிப்பில் அரண்மனை படத்தின் நான்காம் பாகத்தை தொடங்கி ஷூட்டிங்கை முடித்து ரிலீஸ் பணிகள் நடந்து வருகின்றன. இந்த படத்தில் முதலில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் பின்னர் சுந்தர் சி யே கதாநாயகனாக நடித்துள்ளார்.

இந்த படம் மே 3 ஆம் தேதி ரிலீஸான நிலையில், கலவையான விமர்சனங்களையே பெற்றது. ஆனாலும் படத்தின் வசூல் விமர்சனங்களைத் தாண்டி பெரியளவில் உள்ளது. முதல் வாரத்தில் இந்த படம் வசூலில் 50 கோடி ரூபாயைத் தாண்டியது. இந்நிலையில் இப்போது படம் மூன்றாவது வாரத்தில் 100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டி 2024 ஆம் ஆண்டின் முதல் ப்ளாக்பஸ்டர் தமிழ் சினிமாவாக மாறியுள்ளது. நட்சத்திர மதிப்பில்லாத நடிகர்கள் நடித்த இந்த படம் 100 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

இதையடுத்து இந்த படத்தின் ஓடிடி உரிமையை மிகப்பெரிய தொகை கொடுத்து டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதையடுத்து ஜூன் 21 ஆம் தேதி முதல் இந்த படம் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’கல்கி 2898 ஏடி’ படத்தின் 2 நாள் வசூல் இத்தனை கோடியா? தயாரிப்பு நிறுவனத்தின் அறிவிப்பு..!

நடிகர்கள் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கரின் 'நேசிப்பாயா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் லான்ச் விழா!

கருப்பு நிற உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய நிதி அகர்வால்!

பாலைவனத்தில் க்யூட்டான போட்டோஷூட்டை நடத்திய மாளவிகா மோகனன்!

சிம்புவின் அடுத்த படத்தை இயக்கப் போவது இந்த இயக்குனர்தான்.. கழட்டிவிடப்பட்ட தேசிங் பெரியசாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments