Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியன் 2 டப்பிங் பணிகளை தொடங்கிய கமல்ஹாசன்… !

Webdunia
செவ்வாய், 10 அக்டோபர் 2023 (06:54 IST)
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அந்த பிரச்சனைகளை எல்லாம் கடந்து, தற்போது மீண்டும் தொடங்கி ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ரிலீஸ் ஆகும் என தகவல்கள் வெளியாகின. ஆனால் இப்போது அடுத்த ஆண்டு பின்பகுதியில் ஆகஸ்ட் மாதம் சுதந்திர தின விடுமுறையை முன்னிட்டுதான் ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இதற்குக் காரணம் படத்தின் வி எஃப் எக்ஸ் மற்றும் கிராபிக்ஸ் காட்சிகளுக்கான வேலைகள் தாமதம் ஆவதுதான் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது படத்தின் டப்பிங் பணிகளை நடிகர் கமல்ஹாசன் தொடங்கியுள்ளார். இது சம்மந்தமான வீடியோவை படக்குழு இணையத்தில் பகிர, அது வைரல் ஆகிவருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கலக்கும் கல்கி 2898 ஏடி.. மூன்றாவது நாளிலேயே மூச்சடைக்க செய்யும் வசூல்!

மச்சானின் காதலியை கரம்பிடித்த மாமா! காமெடி கலாட்டா! – குருவாயூர் அம்பலநடையில் OTT விமர்சனம்!

’கல்கி 2898 ஏடி’ படத்தின் 2 நாள் வசூல் இத்தனை கோடியா? தயாரிப்பு நிறுவனத்தின் அறிவிப்பு..!

நடிகர்கள் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கரின் 'நேசிப்பாயா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் லான்ச் விழா!

கருப்பு நிற உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய நிதி அகர்வால்!

அடுத்த கட்டுரையில்
Show comments