Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘மாஸ்’ வசனத்தை ‘தமாஸ்’ ஆக்கிய கமல்… பிரபல தொலைக்காட்சியில் விக்ரம் ஸ்பெஷல் நிகழ்ச்சி

Webdunia
வெள்ளி, 27 மே 2022 (09:59 IST)
நடிகர் கமல் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கலந்துகொள்ளும் விக்ரம் ஸ்பெஷல் நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.

கமல்ஹாசன் விஜய் சேதுபதி பகத் பாசில் உள்பட பலர் நடித்த விக்ரம் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படம் வரும் ஜுன் மாதம் 3 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்துக்கும் அனிருத் இசையமைத்துள்ளார். கமல் நடிப்பில் நான்காண்டுகளுக்குப் பிறகு ரிலீஸ் ஆகும் முதல் படமாக விக்ரம் உருவாகி வருகிறது. வரும் ஜூன் 3 ஆம் தேதி 5 மொழிகளில் இந்தியா முழுவதும் ரிலீஸாகிறது.

இதையடுத்து படத்துக்கான ப்ரமோஷன் பணிகளை கமல்ஹாசனும் படக்குழுவினரும் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு விக்ரம் ஸ்பெஷல் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. இதில் கமல் மற்றும் லோகேஷ் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் கமல் விக்ரம் படத்தில் வரும் மாஸான வசனத்தை தசாவதாரம் படத்தின் பல்ராம் நாயுடு பேசினால் எப்படி இருக்கும் என்று பேசிக் காட்டியுள்ளார். இது இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vijay Television (@vijaytelevision)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஷாலை நம்பாத பைனான்சியர்கள்… கனவுப் படமான துப்பறிவாளன் 2 டிராப்பா?

முத்தையாவின் அடுத்த படத்தின் கதாநாயகன் இவர்தான்… வெளியான தகவல்!

கௌதம் மேனன் இயக்கத்தில் விஷால்… அடுத்தடுத்த ப்ளாப்களால் படத்தைக் கைவிட்ட சத்யஜோதி பிலிம்ஸ்!

முருகதாஸின் அடுத்த படத்தில் ஃபஹத் பாசில்… பாலிவுட்டில் எண்ட்ரி!

106 வயசுல எப்படி சண்டை போட முடியும்… இந்தியன் தாத்தா குறித்த கேள்விகளுக்கு ஷங்கர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments