Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

5வது சூப்பர் ஸ்டார் & பைரவாவின் நண்பரான புஜ்ஜி 22 மே 2024 ல் அறிமுகமாகிறார்!!

Advertiesment
5வது சூப்பர் ஸ்டார் & பைரவாவின்  நண்பரான புஜ்ஜி 22 மே 2024 ல் அறிமுகமாகிறார்!!

J.Durai

, திங்கள், 20 மே 2024 (11:51 IST)
கல்கி 2898 கி.பி., படம் வெளியீடு நெருங்கி வரும் நிலையில்,  படத்தின் மீதான எதிர்பார்ப்பு உட்சகட்டத்தை எட்டியுள்ளது. கல்கி படத்தின் ஐந்தாவது சூப்பர் ஸ்டார் பைரவாவின் சிறந்த நண்பரான புஜ்ஜியின் அறிமுகம் மே 22, 2024 அன்று வெளியாகவுள்ளது. 
 
'From Skratch EP4: Building A Superstar' என்ற தலைப்பிலான கண்கவர் திரைக்குப் பின்னால் நம்மை ஒரு அசாத்தியமான காட்சி அனுபவத்திற்குள்  கூட்டிச் செல்கிறார் இயக்குனர் நாக் அஷ்வின்.  
 
2 நிமிட 22 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ, கேரேஜ் அமைப்பிலான செட்டிங்கில்,  பிரபாஸுடனான  சந்திப்பு  காட்சிகளைக் காட்டுகிறது, இது மே 22 ஆம் தேதி வெளியாகவுள்ளது 
 
சமீபத்தில் 2898 கி.பி கல்கியின் சாம்ராஜ்யத்தில்  அமிதாப் பச்சனின் அஸ்வத்தாமாவின் தோற்றம்,  ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளை ஒருங்கிணைத்து உண்மையான பான்-இந்திய டீஸராகக் அசத்தலால வெளியாகியுள்ளது இந்த டீசர். 
 
அற்புதமான படைப்பாளி நாக் அஸ்வின் இயக்கத்தில், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன், மற்றும் திஷா பதானி போன்ற  இந்தியளவிலான முன்னணி நட்சத்திரங்களின் கூட்டணியில், வைஜெயந்தி மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், கல்கி 2898 AD இந்த ஆண்டின்  மிக முக்கிய படைப்பாக உள்ளது. 
 
இப்படம்   ஜூன் 27, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
 
வீடியோ லிங்க்
 
https://www.youtube.com/watch?v=8eIq9BHs8lk

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மறுபடியும் பழைய சினிமாவை நோக்கி போயிட்டோம்! திரும்ப நடிக்க மாட்டேன்! - கமல்ஹாசன் ஓப்பன் டாக்!