Webdunia - Bharat's app for daily news and videos

Install App

களவாணி 2 காலைக்காட்சி ரத்து – பின்னணி என்ன ?

Webdunia
வெள்ளி, 5 ஜூலை 2019 (14:16 IST)
இன்று ரிலிஸாவதாக இருந்த களவாணி 2 படத்தின் காலைக் கட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

விமல், ஓவியா நடித்து 2010ல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் களவாணி. இயக்குனர் சற்குணம், ஓவியா ஆகியோருக்கு அறிமுக படமாகவும், வெற்றி படமாகவும் அமைந்தது களவாணி. படம் வெளியாகி 9 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இரண்டாவது பாகமான “களவாணி 2” இன்று ரிலிஸ் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் சில பல காரணங்களால் இன்று காலைக் காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரச்சனைகள் முடிந்த பின் மாலைக்காட்சி ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏன் ரிலிஸாகவில்லை என விசாரித்ததில் படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான சற்குணம் படத்தில் நடித்த துணை நடிகர்கள் மற்றும் வில்லன் ஆகியோரிடம் சிலபல லட்சங்களைக் கடனாகப் பெற்றுக்கொண்டு அதை முறையாகத் திருப்பித் தராததால் வந்த விளைவு எனக் கூறுகிறது கோலிவுட் பட்சி.

ஏற்கனவே தயாரிப்பாளர் சிங்காரவேலன் இந்த படத்தினை ரிலிஸ் செய்யக்கூடாது என நீதிமன்றம் சென்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments