Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புதுப்பேட்டை 2 திரைப்படத்தை தயாரிக்கப் போகும் பிரபல தயாரிப்பாளர்!

புதுப்பேட்டை 2 திரைப்படத்தை தயாரிக்கப் போகும் பிரபல தயாரிப்பாளர்!

vinoth

, வெள்ளி, 9 பிப்ரவரி 2024 (07:26 IST)
இயக்குனர் செல்வராகவனின் சமீபத்தைய படங்களான என் ஜி கே மற்றும் நானே வருவேன் உள்ளிட்ட படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதுமட்டுமில்லாமல் மோசமான விமர்சனங்களையும் பெற்று வருகின்றன. அடுத்து அவர் தன்னுடைய எவர்க்ரீன் ஹிட் படமான 7ஜி ரெயின்போ காலணி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். பைனான்ஸ் பிரச்சனை காரணமாக அந்த படம் பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 2006 ஆம் ஆண்டு தன்னுடைய இயக்கத்தில் தனுஷ், சோனியா அகர்வால் மற்றும் சினேகா நடிப்பில் உருவான புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய அப்டேட்டைக் கொடுத்துள்ளார். இது சம்மந்தமான அவரது பதிவில் “இந்த ஆண்டு புதுப்பேட்டை 2 திரைப்படம் தொடங்கும் என நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார். இது தனுஷ் மற்றும் செல்வராகவன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுப்பேட்டை திரைப்படத்தை லஷ்மி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்போது அந்த நிறுவனம் படங்கள் தயாரிப்பதை நிறுத்திவிட்டது. இந்நிலையில் புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகத்தை கலைப்புலி தாணு தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இவர் ஏற்கனவே செல்வராகவன் – தனுஷ் காம்பினேஷனில் ‘நானே வருவேன்’ திரைப்படத்தை தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சௌந்தர்யா இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்… லேட்டஸ்ட் தகவல்!