Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அப்படி ஒன்னு நடந்தால் உடனே நடிப்பை நிறுத்திவிடுவேன் - அதிர்ச்சி கொடுத்த காஜல்!

அப்படி ஒன்னு நடந்தால் உடனே நடிப்பை நிறுத்திவிடுவேன் - அதிர்ச்சி கொடுத்த காஜல்!
, வியாழன், 20 மே 2021 (11:00 IST)
தமிழ் சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவரான நடிகை காஜல் அகர்வால் முன்னணி நடிகர்கள் பலருடன் சேர்ந்து நடித்துவிட்டார். தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் போன்ற வேற்று மொழி படங்களிலும் நடித்து தூள் கிளப்பி வருகிறார் காஜல். 
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவருக்கு திருமணம் முடிந்த நிலையில் கொரோனா காரணமாக படப்பிடிப்புகள் அதிகமாக இல்லாததால் கணவருடன் ஜாலியாக சுற்றிவருகிறார். இந்நிலையில் குடும்ப வாழ்க்கை என்றாகிவிட்ட நிலையில் தொடர்ந்து படம் நடிப்பீர்களா? என்ற ரசிகரின் கேள்விகளுக்கு பதில் கூறிய காஜல், 
 
என் கணவர் கௌதம், என்னுடைய சினிமா பயணத்திற்கு முழு ஆதரவு கொடுத்து வருகிறார். அதனால் இப்போதைக்கு எந்த கவலையும் இல்லாமல் நடித்து வருகிறேன். ஒருவேளை எதிர்காலத்தில் தனது கணவர் நடிப்பை நிறுத்திவிடு என்று கூறினால் மறுப்பு தெரிவிக்காமல் உடனே நிறுத்திவிடுவேன் என்று கூறி ரசிகர்களுக்கு செம ஷாக் கொடுத்துள்ளார் காஜல் அகர்வால்.   
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குக் வித் கோமாளி தீபாவா இது....? வைரலாகும் திருமண புகைப்படம்