Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இனி படங்களில் நடிக்க மாட்டேன் - காரணம் கூறி அதிர வைத்த காஜல் அகர்வால்!

Advertiesment
இனி படங்களில் நடிக்க மாட்டேன் - காரணம் கூறி அதிர வைத்த காஜல் அகர்வால்!
, புதன், 16 ஜூன் 2021 (14:33 IST)
தமிழ் சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவரான நடிகை காஜல் அகர்வால் முன்னணி நடிகர்கள் பலருடன் சேர்ந்து நடித்துவிட்டார். தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் போன்ற வேற்று மொழி படங்களிலும் நடித்து தூள் கிளப்பி வருகிறார் காஜல்
 
இவர் மும்பையை சேர்ந்த இன்டீரியர் பிசினஸ் மேன் கெளதம் கிச்சுலுவை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகி வருகிறார். திருமணத்திற்கு பின்னரும் காஜலுக்கு சமந்தாவை போன்றே படவாய்ப்புகள் குவிந்து வருகிறது. ஆனால், அவரோ எனக்கு வேண்டாம். இனி நான் படங்களில் நடிக்க போவதில்லை என கூறி வருகிறாராம். காரணம் கணவரின் பிசினஸை கையில் எடுத்து நடத்த ஆயுதமாகிவிட்டாராம் காஜல். எனவே இனி நடிகை காஜல் என்பதற்கு பதில் தொழிலதிபர் காஜல் என்று தான் அழைக்கவேண்டும். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஷங்கர் மீது ஐதராபாத் ஐகோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்த லைகா!