Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கைதி ரீமேக் போலாவின் ரிலீஸ் தேதி அறிவிப்பு… தபு கதாபாத்திர அறிமுக போஸ்டர்!

Webdunia
புதன், 18 ஜனவரி 2023 (09:54 IST)
கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற கைதி திரைப்படம் இப்போது இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. இந்த படத்தை தமிழில் தயாரித்த எஸ் ஆர் பிரபுவே இந்தியிலும் ரிலையன்ஸ் நிறுவனத்தோடு இணைந்து தயாரிக்கிறார்.

கார்த்தி நடித்த கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கன் நடிக்கிறார். இந்தி பதிப்பில் தமிழில் நரேன் நடித்த கதாபாத்திரத்தை மாற்றி பெண் போலிஸ் அதிகாரியாக்கி அதில் தபுவை நடிக்க வைக்கின்றனர்.  இந்த படத்தை கதாநாயகனாக நடிக்கும் அஜய் தேவ்கனே இயக்குகிறார். இதற்கு முன்னர் அவர் இரண்டு படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் முழுவதும் நிறைவுபெற்று விட்ட நிலையில் மார்ச் 30 ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள தபுவின் கதாபாத்திர அறிமுக போஸ்டரும் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments