Webdunia - Bharat's app for daily news and videos

Install App

"காடுவெட்டி " ஜாதி படம் கிடையாது! – ஆர்.கே.சுரேஷ் அளித்த விளக்கம்!

J.Durai
திங்கள், 4 மார்ச் 2024 (15:16 IST)
காடுவெட்டி குரு என்றால் தமிழ் நாட்டு மக்களிடம் அவ்வளவு பிரபலம். அந்த தலைப்பில் தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாக நடிக்க, சோலை ஆறுமுகம் இயக்கி இருக்கும் படம் ‘காடுவெட்டி’.


 
மஞ்சள் ஸ்கிரீன்ஸ் பட நிறுவனம் சார்பில் த. சுபாஷ் சந்திரபோஸ், K.மகேந்திரன், N. மகேந்திரன், C. பரமசிவம், G. ராமு  சோலை ஆறுமுகம் ஆகியோர்,இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா பின்னணி இசை அமைத்திருக்கிறார். வணக்கம் தமிழா சாதிக் பாடல்களுக்கு இசை அமைத்திருக்கிறார். மா.புகழேந்தி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில்  நடைபெற்றது.

படத்தின் நாயகன் ஆர்.கே.சுரேஷ் பேசியதாவது:-

“என்னைப்பற்றிய எத்தனையோ கட்டுக்கதைகள் கற்பனைகளை கிளப்பிவிட்டார்கள். நான் 100 படங்கள் விநியோகம் செய்திருக்கிறேன். எத்தனையோ படங்கள் தயாரித்திருக்கிறேன்; 40 படங்கள் நடித்திருக்கிறேன். சினிமாவில் எனக்கு 15 வருட உழைப்பு உண்டு. எல்லா அரசியல்வாதிகள் எல்லா சாதிக்காரர்களுடனும் பழக்கம் உண்டு. அப்படியான சூழலில் என்னைப்பற்றி தவறான செய்திகள் வெளிவந்தது. 15வருடமாக சினிமாவில் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்த நான் தவறு செய்திருப்பேனா?

வடமாவட்டங்கள் தென் மாவட்டங்களில் ரசிகர்கள் என் மீது அன்பு வைத்திருக்கிறார்கள்

ALSO READ: ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!
 
அதனால் சினிமா, அரசியலை விட்டு நான் போகமாட்டேன். இப்போது காடுவெட்டிக்கு வருவோம். இந்த கேரக்டரில் நடித்ததற்காக நான் பெருமைப்படுகிறேன்

இயக்குனர் சோலை ஆறுமுகம் கதையை சொன்னதுமே அவரை மைண்ட்ல வச்சுதான் நடித்தேன். குரு ஐயாவின் குடும்பத்துக்கு சொல்றேன். இந்தப்படம் உங்களுக்கு பெருமை சேர்க்கும்.

இது உணர்வு சார்ந்த படம். இதை தமிழ்நாடு முழுவதும் வரவேற்பார்கள். இது சாதி படம் இல்லை. நான் எந்த சாதியையும் தவறாக பேச மாட்டேன். சாதி என்பது உணர்வு மட்டுமே.” என்றார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒவ்வொரு நாளும் ஒவ்வொருத்தி.. இரக்கமே இல்லாம நடந்துக்குவார்! - மனம் திறந்த சல்மான்கான் முன்னாள் காதலி!

ஜெயம் ரவியின் கேரியரில் மோசமான வசூல்.. பிரதர் படத்தால் கையை சுட்டுக்கொண்ட விநியோகஸ்தர்கள்!

லியோ படத்தில் 20 சதவீதம்தான் விமர்சனத்துக்கு உள்ளானது… லோகேஷ் கனகராஜ் பதில்!

இன்ஸ்டாகிராமில் அபிஷேக் பச்சனுக்கு மட்டுமே அந்த பெருமையைக் கொடுத்த ஐஸ்வர்யா ராய்!

அடுத்தடுத்து ஹிட் பட இயக்குனர்களுக்குத் தூண்டில் போடும் தனுஷ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments