Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜோதிகாவின் ‘காற்றின் மொழி’ ஷூட்டிங் இன்று தொடங்கியது!

Webdunia
திங்கள், 4 ஜூன் 2018 (12:49 IST)
ஜோதிகா நடிக்கும் ‘காற்றின் மொழி’ படத்தின் ஷூட்டிங் இன்று தொடங்கியது.
 
ராதாமோகன் இயக்கத்தில், ஜோதிகா நடிப்பில் ரிலீஸான படம் ‘மொழி’. அனைவராலும் கொண்டாடப்பட்ட இந்தப் படத்துக்குப் பிறகு, 10 வருடங்கள் கழித்து ராதாமோகன் - ஜோதிகா கூட்டணி இணைந்துள்ளது. 
 
‘காற்றின் மொழி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப் படம், ஹிந்தியில் வித்யா பாலன் நடிப்பில் சூப்பர் ஹிட்டான ‘துமாரி சுலு’ படத்தின் ரீமேக் ஆகும். இதில், ஆர்.ஜே. வேடத்தில் நடிக்கிறார் ஜோதிகா.
 
விதார்த், லட்சுமி மஞ்சி, எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, குமாரவேல், மோகன்ராம், உமா பத்மநாபன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். பாப்டா மீடியா ஒர்க்ஸ் சார்பில் தனஞ்ஜெயன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். 
 
இந்தப் படத்தின் ஷூட்டிங், சென்னையில் இன்று தொடங்கியது. சிவகுமார் கிளாப் அடித்து ஷூட்டிங்கைத் தொடங்கி வைத்தார். சென்னையில் தொடர்ந்து 50 நாட்கள் ஒரே ஷெட்யூலில் படமாக்க இருக்கின்றனர். அக்டோபர் மாதம் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

200 கிமீ வேகத்தில் சென்ற அஜித் கார்.. மேனேஜர் சுரேஷ் சந்திரா வெளியிட்ட வீடியோ..!

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஸ்டன்னிங்கான லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆல்பம்!

தமன்னாவின் லேட்டஸ்ட் கிளாமரஸ் போட்டோஷூட் ஆல்பம்!

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!

விஷாலை நம்பாத பைனான்சியர்கள்… கனவுப் படமான துப்பறிவாளன் 2 டிராப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments