Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கங்குவா படத்தின் விமர்சனம் என்னைப் பாதித்தது… ஜோதிகா கவலை!

vinoth
செவ்வாய், 11 மார்ச் 2025 (16:47 IST)
சூர்யா நடிப்பில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உருவாக்கத்தில் இருந்த ‘கங்குவா’ திரைப்படம் கடந்த ஆண்டு இறுதியில் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக ரிலீஸானது. படத்தில் பாபி தியோல், திஷா பதானி, நட்டி நட்ராஜ் உள்ளிட்டவர்கள் நடிக்க, வெற்றி ஒளிப்பதிவு மேற்கொள்ள, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். பட ரிலீஸுக்கு முன்னர் மிக பெரிய அளவில் படக்குழுவினர் படம் பற்றி பேசி பில்டப் கொடுத்திருந்தனர்.

ஆனால் ரிலீஸுக்குப் பின்னர் படம் அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யவில்லை. மேலும் பல காட்சிகள் உள்பட மொத்த படமே ரசிகர்களால் ட்ரால் செய்யும் அளவுக்கு மோசமாக இருந்தது. இதனால் கடந்த ஆண்டில் அதிகம் ட்ரோல் செய்யப்பட்ட படமாக கங்குவா அமைந்தது.

இந்த படம் இந்த குறித்து அப்போது பேசியிருந்த ஜோதிகா ’கங்குவா' படத்திற்கு திட்டமிட்டு அவதூறு பரப்பப்படுவதாக கூறியிருந்தார். அதேக் கருத்தை அவர் இப்போது மீண்டும் பேசியுள்ளார். அதில் “வெற்றிகரமான படங்கள் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றன. என் கணவரின் படங்கள் நல்ல படமாக இருந்தபோதும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அந்த படத்தில் (கங்குவா) நிறைய நல்ல முயற்சிகள் இருந்தன. ஆனால் பிற மோசமான படங்களை விட அந்த படம் மோசமாக விமர்சிக்கப்பட்டது. அந்த விமர்சனங்கள் என்னைக் கடுமையாக பாதித்தது. ஊடகங்கள் நியாயமானதாக இல்லை என்பது எனக்கு வருத்தமாக இருந்தது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டி ராஜேந்தரா இது…? ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப் போயிட்டாரே!

மீண்டும் தள்ளிப் போகும் பிரபாஸின் ‘ராஜா சாப்’ ரிலீஸ்… காரணம் என்ன?

ரெட்ரோ படத்துக்காக முதல் முறையாக அந்த முயற்சியை செய்யும் பூஜா ஹெக்டே… தேசிய விருதுக்குக் குறியா?

ராஷ்மிகாவுக்குப் பாதுகாப்பு வழங்க கோரிக்கை… சாதியப் பிரச்சனையாக மாறும் விவகாரம்!

அஜித்தின் அடுத்த படத்தின் இயக்குனர் இவர்தானா..?

அடுத்த கட்டுரையில்
Show comments