Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யாவுடன் நடிக்க இந்த ஒரு கண்டீஷன்தான்… ஜோதிகா பதில்!

vinoth
சனி, 4 மே 2024 (07:20 IST)
தமிழில் பிரபல கதாநாயகியாக இருந்த ஜோதிகா, சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பிறகு, சில ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் விலகி இருந்தார். ஆனால் அதன் பின்னர் 36 வயதினிலே படத்தின் மூலம் திரும்பவும் நடிக்க வந்த அவர் பல படங்களில் நடித்தார். சில மாதங்களுக்கு முன்னர் மலையாளத்தில் மம்மூட்டி ஜோடியாக காதல் என்ற திரைப்படத்தில் நடித்தார். அந்த படம் அவரின் நடிப்புக்கு பாராட்டுகளைப் பெற்று தந்தது.

இதையடுத்து பாலிவுட்டில் ஷைத்தான் என்ற படத்தில் அஜய் தேவ்கன் மற்றும் மாதவன் ஆகியோரோடு இணைந்து நடித்தார். இந்த படம் கடந்த மாதம் வெளியாகி நல்ல வெற்றியைப் பெற்றது. இதையடுத்து அவர் தொழிலதிபர் ஸ்ரீகாந்த் போலாவின் பயோபிக் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

மே 10 ஆம் தேதி ரிலீஸாக உள்ள அந்த திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தபோது அதில் ஜோதிகா கலந்துகொண்டார். அப்போது சூர்யாவுடன் இணைந்து நடிப்பது பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் “சூர்யாவுடன் இணைந்து நடிக்க நல்ல கதை அமைய வேண்டும். அதற்காக 10 ஆண்டுகளாக காத்திருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’இந்தியன் 2’ டிரைலர் எப்போது? லைகா நிறுவனத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அடியாத்தி இது என்ன ஃபீலு.. வாத்தி புகழ் சம்யுக்தாவின் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

மேலும் ஒரு சர்வதேச திரைப்பட விழாவில் ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம்!

ஆர் ஜே பாலாஜியின் மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தின் டைட்டில் இதுதான்…!

50 கோடி ரூபாய் வசூலைக் கடந்த சூரி… தயாரிப்பாளர் அளித்த காஸ்ட்லி பரிசு!

அடுத்த கட்டுரையில்
Show comments