Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜோதிகாவின் ரி எண்ட்ரி சூப்பர் ஹிட் படம் இன்று முதல் ஓடிடியில்… எந்த தளத்தில் தெரியுமா?

ஜோதிகாவின் ரி எண்ட்ரி சூப்பர் ஹிட் படம் இன்று முதல் ஓடிடியில்… எந்த தளத்தில் தெரியுமா?

vinoth

, வெள்ளி, 3 மே 2024 (15:59 IST)
தமிழில் பிரபல கதாநாயகியாக இருந்த ஜோதிகா, சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பிறகு, சில ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் விலகி இருந்தார். ஆனால் அதன் பின்னர் 36 வயதினிலே படத்தின் மூலம் திரும்பவும் நடிக்க வந்த அவர் பல படங்களில் நடித்தார். சில மாதங்களுக்கு முன்னர் மலையாளத்தில் மம்மூட்டி ஜோடியாக காதல் என்ற திரைப்படத்தில் நடித்தார். அந்த படம் அவரின் நடிப்புக்கு பாராட்டுகளைப் பெற்று தந்தது.

இதையடுத்து பாலிவுட்டில் ஷைத்தான் என்ற படத்தில் அஜய் தேவ்கன் மற்றும் மாதவன் ஆகியோரோடு இணைந்து நடித்தார். இந்த படத்தை சூப்பர் 30 படத்தை இயக்கிய விகாஸ் பால் இயக்கினார். ஹாரர் த்ரில்லர் படமான ஷைத்தான் குஜராத்தி மொழியில் வெளியான ‘வாஷ்’ என்ற படத்தின் ரீமேக் ஆகும். இந்த படம் வெளியானது முதல் நல்ல வசூலைப் பெற்று 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது.

இந்நிலையில் இன்று முதல் இந்த திரைப்படம் இன்று முதல் நெட்பிளிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது. இந்த படத்தின் ரீமேக் தமிழில் வரவும் வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

100 கோடி வசூல் சாதனை படைத்த பஹத் பாசிலின் ஆவேஷம்… ஓடிடி ரிலீஸ் தேதி என்ன?