Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யாவின் அடுத்த படத்தில் சசிகுமார்-ஜோதிகா

Webdunia
வியாழன், 28 நவம்பர் 2019 (17:02 IST)
சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் ஜோதிகா நடித்த ’36 வயதினிலே’ என்ற படத்தை முதன் முதலில் தயாரித்தது.  அதன் பின்னர் ’பசங்க 2’, ’24’, ’மகளிர் மட்டும்’, ’கடைக்குட்டி சிங்கம்’ ’உரியடி’, ’ஜாக்பாட்’ ஆகிய படங்களை தயாரித்த இந்நிறுவனம் தற்போது சூர்யா நடித்துவரும் சூரரைப்போற்று என்ற படத்தை தயாரித்து வருகிறது
 
இந்த நிலையில் 2டி நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தில் சசிகுமார் மற்றும் ஜோதிகா முதன்முதலாக இணைந்து நடிக்க உள்ளனர். இருப்பினும் இருவரும் ஜோடியாக நடிக்கின்றார்களா? என்பது குறித்த தகவல் இதுவரை இல்லை.  இந்த படத்தில் மேலும் ஒரு முக்கிய கேரக்டரில் சமுத்திரக்கனி நடிக்க உள்ளார்
 
மேலும் சூரி, கலையரசன் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தை இரா.சரவணன் என்பவர் இயக்க உள்ளார். டி இமான் இசையமைக்கும் இந்தப் படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு இன்று தொடங்கியது. இந்த படம் முழுக்க முழுக்க ஒரு கிராமத்து கதையம்சம் கொண்ட படம் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு தஞ்சை மற்றும் புதுகை பகுதிகளில் படமாக்கப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நாளை வெளியாகிறது விடாமுயற்சி படத்தின் முதல் சிங்கில் ‘Sawadeeka’!.. டிரைலர் எப்போது?

ஈரம் பட கூட்டணியின் அடுத்த படம் ‘சப்தம்’.. ரிலீஸ் தேதி இதுதான்!

நடிகர் சிவராஜ்குமாருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்தது…!

விடாமுயற்சி படத்தின் அனைத்துப் பணிகளையும் முடித்துக் கொடுத்த அஜித்!

ஒரு மாபெரும் எழுத்துக்கலைஞனை இழந்திருக்கிறோம்.. கமல்ஹாசனின் சோக பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments