Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யா கார்த்திக் சுப்பராஜ் படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகர்!

vinoth
ஞாயிறு, 12 மே 2024 (07:48 IST)
சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது கங்குவா திரைப்படம். இந்த படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிரார்.  இந்த படத்தின் கதைக்களம் நிகழ்காலம் மற்றும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலம் என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் திஷா படானி மற்றும் பாபி தியோல் ஆகிய பாலிவுட் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். விரைவில் இந்த படம் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.

இந்த படத்துக்குப் பிறகு அவர் சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக இருந்த நிலையில் தற்போது அந்த படம் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு தகவலோ அந்த படம் கிடப்பில் போடப்பட்டுவிட்டதாக சொல்கிறது.

இந்நிலையில் கடந்த மாதம் சூர்யா கார்த்திக் சுப்பராஜ் கூட்டணியில் ஒரு படம் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. படத்துக்கு இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணனும், ஒளிப்பதிவாளராக திருவும் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் மற்றும் சூர்யா ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.

இந்த படத்தின் ஷூட்டிங் ஜூன் மாதம் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் மலையாள நடிகரான ஜோஜு ஜார்ஜ் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இவர் ஏற்கனவே கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ‘ஜகமே தந்திரம்’ திரைப்படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்ன ஃபேன்மேட் போஸ்டர் மாதிரி இருக்கு… கலவையான விமர்சனங்களை சந்திக்கும் ‘விடாமுயற்சி’ முதல் லுக்!

நான் இன்னும் அனிருத் ரசிகனாகவில்லை… இந்தியன் 2 மேடையில் கமல் பேச்சு!

டிடிஎஃப் வாசனோடு கிஷோர் முக்கிய வேடத்தில் நடிக்கும் “IPL” முதல் லுக் போஸ்டர்!

விக்ரம்மின் தங்கலானோடு மோதும் கார்த்தியின் மெய்யழகன்!

மழை பிடிக்காத மனிதன் படத்தில் விஜயகாந்த் இருக்கிறார்…இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்ல முடியும்- விஜய் மில்டன் தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments