Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யா கூடவே இருக்கும் வில்லன் நான்தான்… வாடிவாசல் அப்டேட் கொடுத்த அமீர்!

vinoth
ஞாயிறு, 12 மே 2024 (07:34 IST)
நடிகர் சூர்யா இப்போது கங்குவா திரைப்படத்திலும் வெற்றிமாறன் விடுதலை திரைப்படத்திலும் பிஸியாக இருக்கிறார்கள். இதையடுத்து அவர்கள் கூட்டணியில் உருவாகவுள்ள வாடிவாசல் நடக்க உள்ளது. இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். ஜி வி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் சூர்யாவோடு இயக்குனர் அமீர் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் வெற்றிமாறன் விடுதலை 2 படத்தின் ஷூட்டிங்கை இன்னும் முடிக்கவில்லை. அதனால் வாடிவாசல் படம் எப்போது தொடங்கும் என்பது இன்னும் முடிவாகவில்லை. இந்நிலையில் இப்போது சூர்யா மற்றும் வெற்றிமாறன் ஆகிய இருவரும் சந்தித்து வாடிவாசல் குறித்து உரையாடியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் விரைவில் வாடிவாசல் படம் குறித்த அப்டேட் வெளியாகலாம் என தெரிகிறது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் அமீர் வாடிவாசல் பற்றி பேசியுள்ளார். அதில் “வாடிவாசல் படத்தில் சூர்யா கதாபாத்திரத்தின் கூடவே வரும் வில்லனாக நான் நடிக்கிறேன். என் கதாபாத்திரம் படம் முழுவதும் வருகிறேன்” என அப்டேட் கொடுத்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தேவதை வம்சம் நீயோ… திஷா பதானியின் கலர்ஃபுல் க்ளிக்ஸ்!

ரிலீஸுக்கு ஒரு ஆண்டுக்கு முன்பே 130 கோடி ரூபாய் சம்பாதித்த நோலனின் ‘ஒடிசி’!

பிரபாஸின் ‘ஸ்பிரிட்’ படத்துக்கு இசையமைக்கிறாரா அனிருத்?

நடிப்பு சலிப்பை ஏற்படுத்தினால் uber ஓட்டுனர் ஆகிவிடுவேன் – ஃபஹத் பாசில் பகிர்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments