Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜான் விஜய் மன்னிப்பு கேட்டு விட்டார் - ஸ்ரீரஞ்சனி பேட்டி

Webdunia
சனி, 20 அக்டோபர் 2018 (18:18 IST)
தன்னிடம் தவறாக நடந்து கொண்டதற்கு நடிகர் ஜான் விஜய் மன்னிப்பு கேட்டு விட்டதாக பாடகி ஸ்ரீரஞ்சனி தெரிவித்துள்ளார்.

 
கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி புகார் எழுப்பினார். இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையே இயக்குநர் சுசி கணேசன் மீது ஆவணப்பட இயக்குநர் லீனா மணிமேகலை புகார் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே  நடிகர் ஜான் விஜய் மீது பின்னணி பாடகியும், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியுமான ஸ்ரீரஞ்சனி புகார் கூறியுள்ளார். 
 
இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில் “நடிகர் ஜான் விஜய் பெண்களிடம் மிக மோசமாக நடந்து கொள்வார். வலுக்கட்டாயமாக பாலியல் உறவு கோரும் தவறான மனம் கொண்டவர். ஒருமுறை நான் அவரை பேட்டி கண்டிருந்தேன். ஆனால் அது முடிந்து ஒரு மாதத்துக்குப் பின்னர் நள்ளிரவில் அவர் எனக்கு ஃபோன் செய்தார். நான் நல்ல தூக்கத்தில் இருந்தேன்.  
 
என்னிடம் நிகழ்ச்சி ஒளிபரப்பு பற்றி நீங்கள் சொல்லாமல் விட்டுவிட்டீர்களே என வழிந்தார். நான் நாளை பேசுகிறேன் என்றேன். ஆனால், அவரோ தொலைபேசியில் ஆபாசமாக பேச முற்பட்டார். போன் செக்ஸ் வேண்டும் என்றார். உங்கள் மனைவிக்கு நான் ஃபோன் செய்வேன் எனக் கூறியவுடன் தான் அவர் அழைப்பைத் துண்டித்தார். அதன்பின்னர் நிறைய பெண்களிடம் நான் ஜான் விஜய் குறித்து எச்சரித்திருக்கிறேன்" எனப் பதிவிட்டுருந்தார்.
 
இந்நிலையில், இன்று காலை லீனா மணிமேகலை, லட்சுமி ராம கிருஷ்ணன், சின்மயி மற்றும் ஸ்ரீரஞ்சனி அனைவரும் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
 
அப்போது, தவறாக நடந்து கொண்டதற்காக ஜான் விஜய் மன்னிப்பு கேட்டுவிட்டார் என ஸ்ரீரஞ்சனி தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பார்பி டால் போல மின்னும் தமன்னா… அழகிய புகைப்பட தொகுப்பு!

ஸ்டன்னிங்கான உடையில் பூஜா ஹெக்டேவின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சூர்யா 45 படத்தில் இணைந்த லப்பர் பந்து படக் கதாநாயகி!

நான் பிற மொழிப் பாடல்களில் இருந்து காப்பியடிக்கக் காரணமே அவர்கள்தான்… ரகசியம் பகிர்ந்த தேவா!

முதல் 2 நாட்களில் 20 கோடி ரூபாய் வசூல்.. ஜப்பானைக் குறிவைக்கும் மகாராஜா!

அடுத்த கட்டுரையில்