Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கீர்த்திசுரேஷூக்கு வரவேற்பு அளித்த ஜான்விகபூர்

கீர்த்திசுரேஷூக்கு வரவேற்பு அளித்த ஜான்விகபூர்
, வியாழன், 14 மார்ச் 2019 (22:00 IST)
பிரபல தென்னிந்திய நடிகை கீர்த்திசுரேஷ், பாலிவுட் படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாகவும் கால்பந்து வீரர் ஒருவரின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் அவர் அஜய்தேவ்கான் ஜோடியாக நடிக்கவுள்ளதாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கவுள்ள இந்த படத்தில் கீர்த்திசுரேஷ் நடிப்பது உறுதியானவுடன் ஸ்ரீதேவியின் மகளும் நடிகையுமான ஜான்வி கபூர், கீர்த்தியை வரவேற்றுள்ளார்.
 
இதுகுறித்து ஜான்வி கூறியபோது, 'மகாநதி' திரைப்படத்தைப் பார்த்ததில் இருந்து உங்கள் மீது அளவுகடந்த ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. எங்கள் அப்பாவின் அடுத்த படத்தில் நீங்கள் இணைந்திருப்பது மிகுந்த உற்சாகமளிக்கிறது. நல்வரவு” என ஜான்வி கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஜான்விகபூருக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் நன்றி தெரிவித்துள்ளார். 
 
webdunia
'நடிகையர் திலகம்' படத்திற்கு பின் கீர்த்திசுரேஷுக்கு அவரது நடிப்பை வெளிப்படுத்தும் வகையில் ஒரு படம் வரவில்லை என்பதால் இந்த படம் அவரது நடிப்புக்கு தீனிபோடும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் ஆர்யா-சாயிஷா ரிசப்ஷன்: குவியும் திரையுலகினர்