Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’தளபதி 64’ படத்தின் டைட்டில்: படக்குழுவினர்களிடம் இருந்து கசிந்த ரகசியம்!

Webdunia
திங்கள், 30 டிசம்பர் 2019 (20:48 IST)
தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகிவரும் ’தளபதி 64’ படத்தின் மூன்று கட்ட படப்பிடிப்புகள் வெற்றிகரமாக முடிவடைந்துவிட்டன. தற்போது படக்குழுவினர் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்
 
இந்த நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருப்பதாகவும், இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருப்பதாகவும், கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை கொண்டாட லண்டன் சென்றுள்ள விஜய், சென்னை திரும்பியதும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அனேகமாக ஜனவரி 20ஆம் தேதிக்கு மேல் படப்பிடிப்பை தொடங்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இதனை அடுத்து சற்று முன்னர் படக்குழுவினர்களிடம் இருந்து கிடைத்த தகவலின்படி இந்த படத்தில் விஜய்யின் கேரக்டர் பெயர் ஜேடி என்ற ஜேம்ஸ் துரைராஜ் என்றும் விஜய்யின் பெயர் தான் இந்த படத்தின் டைட்டில் என்றும் கூறப்படுகிறது. எனவே இந்த படத்தின் டைட்டில் ’ஜேடி’ அல்லது ’ஜேம்ஸ் துரைராஜ்’ என்பதுதான் என்று தகவல்கள் கசிந்துள்ளன
 
விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜூன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமான், ரம்யா, கெளரி கிஷான், தீனா உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என் மகன் இறந்துவிட்டான்.. துயர செய்தி ட்விட்டரில் பகிர்ந்த நடிகை திரிஷா

லப்பர் பந்து படம் மிகச்சிறப்பான படம்… பாராட்டிய மோகன்லால்!

புஷ்பா 2: கூட்ட நெரிசலில் சிக்கிய சிறுவனுக்கு நினைவு திரும்பியது!

ரஜினி பட டைட்டில் இல்லை. ‘சூர்யா 44’ டைட்டில் டீசர் வெளியீடு..!

ஷாருக் கானின் ‘கிங்’ படத்தின் இயக்குனர் திடீர் மாற்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments