Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பணம் இல்லன்னு கவலை இல்லை… ஜெயம் ரவி நம்பிக்கை வார்த்தை!

vinoth
திங்கள், 14 அக்டோபர் 2024 (14:51 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவிக்கும் அவர் மனைவி ஆர்த்திக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இப்போது விவாகரத்துக்கு ரவி விண்ணப்பித்துள்ளார். ஆனால் ஆர்த்தி தரப்பில், தன்னிடம் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக ரவி இந்த முடிவை எடுத்துள்ளார் என சொல்லப்பட்டது.

இதையடுத்து ஜெயம் ரவி தரப்பில் இருந்து ஆர்த்தி மற்றும் அவரது அம்மா சுஜாதா ஆகியோர் மீது சில குற்றச்சாட்டுகளை வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதில் ஜெயம் ரவிக்கு என்று தனி வங்கிக் கணக்குக்குக் கூட இல்லையாம். ஆர்த்தியோடு சேர்ந்து ஜாய்ண்ட் அக்கவுண்ட் இருந்துள்ளது. அதனால் ஜெயம் ரவி தன்னுடைய கிரெடிட் கார்ட் போன்றவற்றைப் பயன்படுத்தி பொருட்கள் வாங்கினால் உடனே ஆர்த்திக்கு மெஸேஜ் சென்றுவிடுவாம். அவர் உடனே போன் செய்து எங்கே இருக்கிறீர்கள்? என்ன ஷாப்பிங் செய்தீர்கள் எனக் கேட்பாராம். இதனால் அவருடைய தனிப்பட்ட சுதந்திரம் பறிபோய்விட்டதாகவும் என அவர் சொன்னதாக எல்லாம் சொல்லப்பட்டது.

இந்நிலையில் இப்போது மும்பைக்குக் குடியேறி பிரதர் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தி வருகிறார் ஜெயம் ரவி. ஒரு நேர்காணலில் பேசிய அவர் “மக்கள் எனக்கு சினிமாவில் ஒரு இடத்தைக் கொடுத்துள்ளார்கள். என்னிடம் பணம் இல்லை என்றால் நான் வருத்தப்பட மாட்டேன். பணம் இல்லை அவ்வளவுதான் என்று சென்றுவிடுவேன். கைகால் இருக்கு, திறமை இருக்கு. மக்கள் கொடுத்த அன்புக்கு முன்னால் எவ்வளவு கோடி சம்பாதித்தாலும் அது ஈடாகாது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கதையில சாவுன்னு இருந்தாலே என் பெயரை எழுதிடுறாங்க… மேடையில் கலகலப்பாக பேசிய கலையரசன்!

ஷங்கரின் கேம்சேஞ்சர் படத்தின் தமிழக விநியோக உரிமை இவ்வளவு கோடியா?

விரைவில் அமரன் படத்தின் 100 ஆவது நாள் விழா.. பிரம்மாண்டமாகக் கொண்டாட திட்டமிடும் கமல்ஹாசன்!

சிம்பு தேசிங் பெரியசாமி இணையும் படத்துக்கு விரைவில் டீசர் ஷூட்டிங்… வெளியான தகவல்!

விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கே இன்னும் சம்பள பாக்கி உள்ளதா?

அடுத்த கட்டுரையில்
Show comments