Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த ஆண்டு ஜெயம் ரவிக்கு இத்தனை படங்கள் ரிலீஸா? வெள்ளிக் கிழமை ஹீரோவாகிடுவார் போல!

Webdunia
சனி, 4 மார்ச் 2023 (10:21 IST)
ஜெயம் ரவி நடிப்பில் வடசென்னையில் நடக்கும் குத்துச் சண்டை போட்டிகளை மையமாக வைத்து உருவான திரைப்படம் பூலோகம். இந்த படத்தை எஸ் பி ஜனநாதனின் உதவியாளர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கி இருந்தார். இந்த படத்துக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து அதே கூட்டணி இரண்டாவது படத்தில் இணைந்துள்ளது. இந்த படத்துக்கு அகிலன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் கடற்கரை பகுதிகளில் அதிகளவில் படப்பிடிப்பு செய்யப்பட்டுள்ளதால் ஒரு புதிய சிக்கல் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார். கடந்த ஆண்டே ரிலீஸ் ஆகவேண்டிய இந்த திரைப்படம் தாமதம் ஆகி வந்த நிலையில் இப்போது மார்ச் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடைசியாக ஜெயம் ரவியின் பூமி மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய திரைப்படங்களை தவிர்த்து வேறு எந்த படங்களும் ரிலீஸாகவில்லை. இந்நிலையில் அந்த இடைவெளியை நிரப்ப இந்த ஆண்டு அகிலன், பொன்னியின் செல்வன் 2, இறைவன், சைரன் மற்றும் எம் ராஜேஷ் இயக்கத்தில் நடிக்கும் படம் என அடுத்தடுத்து படங்கள் ரிலீஸாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆகாஷ் முரளி & அதிதி நடிப்பில் உருவாகும் ‘நேசிப்பாயா’ பட ரிலீஸ் எப்போது?

அமரனுக்கு நம்பிக்கை கொடுத்த பிதாமகன்… பாலா 25 நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!

இந்தியில் மட்டும் 600 கோடி ரூபாய் வசூல்… அனைத்து சாதனைகளையும் உடைத்த புஷ்பா 2!

பாலா நிறைய படம் பண்ணுங்க… வணங்கான் மேடையில் மணிரத்னத்தின் அட்வைஸ்!

எல்லாத்துக்கும் காரணம் பாலா அண்ணன்தான்… வணங்கான் மேடையில் சூர்யா நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments