Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயம் ரவியின் பூமி கதையும் சுட்டதுதானா? பாக்யராஜுக்காக காத்திருக்கும் பஞ்சாயத்து!

Webdunia
சனி, 5 செப்டம்பர் 2020 (17:59 IST)
இயக்குனர் லஷ்மண் இயக்கியுள்ள பூமி படத்தின் கதை தன்னுடையது என்று ஒரு உதவி இயக்குனர் ஒருவர் உரிமை கோரியுள்ளார்.

நடிகர் ஜெயம் ரவி நடித்த ‘பூமி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்து விட்ட நிலையில் திரையரங்குகள் திறந்தவுடன் இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே இந்த படத்தின் முதல் மூன்று போஸ்டர்கள், அதனை அடுத்து டீசர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் ஜெயம் ரவியின் பிறந்தநாளை முன்னிட்டு செப்டம்பர் 10 ஆம் தேதி இந்த படத்தின் சிங்கிள் பாடலை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் உதவி இயக்குனர் ஒருவர் இந்த படத்தின் கதை தன்னுடையது என கதாசிரியர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். தனது முழுக்கதையும் கதாசிரியர்கள் சங்கத்தில் 2017 ஆம் ஆண்டே பதிவு செய்ததாகவும் அவர் கூறியுள்ளார். கதாசிரியர்கள் சங்கத்தின் தலைவர் பாக்யராஜ் தனது மாமியார் மறைவு காரணமாக சில நாட்கள் அலுவலகத்துக்கு வராததால் அவருக்காக இந்த பஞ்சாயத்து இப்போது காத்திருக்கிறதாம். இதற்கு இடையில் புகார் கொடுத்த உதவி இயக்குனரைக் காப்பாற்றும் வேலைகளும் நடந்து வருகிறதாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரசிகை பலியான வழக்கு: நடிகர் அல்லு அர்ஜுனுக்கு கிடைத்த ஜாமீன்..!

விடாமுயற்சி தாமதம் ஏன்? பொங்கலுக்கு 10 படங்கள் வெளியாவது தமிழ் சினிமாவுக்கு நல்லதா?

மாளவிகா மோகனின் கார்ஜியஸ் லுக் போட்டோஸ்!

அழகுப் பதுமையாக ஜொலிக்கும் நிதி அகர்வால்.. கண்கவர் புகைப்படத் தொகுப்பு!

சென்னையில் சூர்யா 45 படத்துக்காக அமைக்கப்படும் பிரம்மாண்ட நீதிமன்ற செட்!

அடுத்த கட்டுரையில்
Show comments