Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனுஷின் ஜகமே தந்திரம் படத்தின் மிரட்டலான தீம் பாடல் ரிலீஸ்!

Webdunia
வெள்ளி, 21 பிப்ரவரி 2020 (19:37 IST)
தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில  ஜகமே தந்திரம் படம் உருவாகி வருகிறது.  வொய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தினை தயாரிக்கின்றனர். தனுஷிற்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி இப்படத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
 
இப்படத்தின் படப்பிடிப்பு லண்டன், சென்னை, மதுரை போன்ற பகுதிகளில் நடைபெற்றது. சுருளி என்ற பாத்திரத்தில் தனுஷ் நடிப்பதால் இதன் டைட்டில் சுருளி என்று கூறப்படுகிறது. அத்துடன் தனுஷ் கிடா மீசையில் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோ சமீபத்தில் வெளியாகி இணையத்தை கலக்கியது. மேலும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் அண்மையில் வெளியாகியது. 
 
இந்நிலையில் தற்போது "ஜகமே தந்திரம்" படத்தின் தீம் மியூசிக்கை படக்குழு யூடியூபில் வெளியிட்டுள்ளனர். இந்த மியூசிக் வீடியோ தனுஷ் ரசிகர்களை ஈர்த்து வருகிறது. இதோ அந்த வீடியோ லிங்க்...
 

தொடர்புடைய செய்திகள்

விடியா திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் மாணவர்களுக்கு லேப்டாப் இல்லை: ஈபிஎஸ் கண்டனம்..!

பிரபல தமிழ் நடிகைக்கு 3வது திருமணம்.. வைரல் புகைப்படம்..!

நடிகர் ஹரிஷ் கல்யாணின் ‘பார்க்கிங்’ திரைப்படம் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் & சயின்ஸ் லைப்ரரியில் இடம்பெற்றுள்ளது!

விஷால் நடிக்கும் அண்ணாமலை பயோபிக் திரைப்படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?... லேட்டஸ்ட் தகவல்!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த ஜான்வி கபூர்… ரீசண்ட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments