Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்.கே.ஜி படத்தயாரிப்பாளர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை!

Webdunia
செவ்வாய், 19 மார்ச் 2019 (10:33 IST)
ஆர்.ஜே. பாலாஜி, ப்ரியா ஆனந்த் நடித்த அரசியல் படமான 'எல்.கே.ஜி' திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. குறைந்த பட்ஜெட்டில் உருவாகிய இந்த படம் நல்ல புரமோஷன் மற்றும் ஊடகங்களின் பாசிட்டிவ் விமர்சனங்கள் காரணமாக மூன்றே நாட்களில் முதலீடு திரும்ப கிடைத்தது
 
இந்த நிலையில் இந்த படத்தை தயாரித்த பிரபல கல்வி நிறுவன குழுமங்களின் தலைவரான ஐசரி கணேஷ் வீடு மற்றும் அலுவலங்களில் இன்று வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். தமிழகத்தில் 27 இடங்கள், தெலுங்கானாவில் 3 இடங்கள் என மொத்தம் வேல்ஸ் குழுமத்திற்கு சொந்தமான 30 இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது
 


சோதனை முழுவதும் முடிந்த பின்னரே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த தகவல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எல்.கே.ஜி வெற்றியை தொடர்ந்து வேல்ஸ் நிறுவனம் இன்னும் ஒருசில படங்களை தயாரிக்க திட்டமிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கண்கவர் உடையில் ஐஸ்வர்யா லஷ்மியின் வித்தியாசமன போட்டோஸ்!

ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோ ஆல்பம்!

ஒரு நாளில் ஒரு கோடி பேரால் பார்க்கப்பட்ட சூர்யாவின் ‘ரெட்ரோ’ பட டீசர்!

இசையமைப்பாளராக அறிமுகமான ஹாரிஸ் ஜெயராஜின் மகன் நிக்கோலஸ் ஹாரிஸ்!

கேம்சேஞ்சர் ப்ரமோஷன்… ஜானி மாஸ்டர் பெயரை நீக்கிய கியாரா அத்வானி!

அடுத்த கட்டுரையில்
Show comments