Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Monday, 28 April 2025
webdunia

டோக்கியோ ஒலிம்பிக்கில் மேரிகோம் பங்கேற்கவில்லை?

Advertiesment
Mary Kom
, செவ்வாய், 19 மார்ச் 2019 (09:50 IST)
2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும் போட்டியான, ஆசிய குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்கவில்லை என இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தெரிவித்துள்ளார்.
 
ஒலிம்பிக் போட்டிகள் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்றுவருகின்றன. ஒலிம்பிக் போட்டியில் விளையாடி, நாட்டிற்காக பதக்கம் வெல்வதே விளையாட்டு வீரர்களின் நீண்ட நாள் கனவாக இருக்கும். அதற்காக விளையாட்டு வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபடுவார்கள். குறிப்பாக குத்துச்சண்டை வீரர்கள் ஒலிம்பிக் போட்டிக்காக அதிகளவில் பயிற்சி மேற்கொள்வார்கள். இம்முறை ஒலிம்பிக் போட்டி 2020ஆம் ஆண்டு ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெறவுள்ளது.
 
இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கவேண்டுமென்றால், தாய்லாந்தில் வரும் ஏப்ரல் மாதம் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் கைப்பற்றும் புள்ளிகளைக் கணக்கில் கொண்டு தான் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவர். 
 
அப்படியிருக்கையில் ஆசிய போட்டியில் தான் பங்கேற்கவில்லை என மேரிகோம் தெரிவித்துள்ளார். மேலும், ரஷியாவின் ஏகடெரின்பர்க்கில் வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள உலக சாம்பியன் போட்டி மூலம் ஒலிம்பிக் தகுதி பெற விரும்புவதாகவும், அகவே ஆசிய போட்டியில் கலந்து கொள்ளாததற்கு இது ஒரு திட்டம் எனவும் தெரிவித்துள்ளார். 
 
தனது 51 கிலோ பிரிவில் எதிராளிகள் நிலை குறித்து அறிய வேண்டியுள்ளதால், உலக சாம்பியன் போட்டியில் பங்கேற்கவுள்ளதாகவும், முறையாக திட்டமிடாமல் ஒலிம்பிக்குக்கு தகுதி பெற முடியாது. ஆகவே தான் முக்கிய போட்டிகளை தேர்வு செய்து கலந்து கொள்கிறேன் எனவும் மேரிகோம் தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நட்சத்திர வீரர் ரோஜர் பெடரரை வீழ்த்தி பட்டத்தை தட்டிச்சென்ற தீம்!