Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச சட்ட ஆலோசனை மையம் தொடங்க முடிவு

Webdunia
சனி, 5 ஆகஸ்ட் 2023 (13:16 IST)
விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச சட்ட ஆலோசனை மையம் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் தற்போது லியோ படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீசாகவுள்ளது.

கடந்த ஜூன் 17 ஆம் தேதி சென்னையில் மாணவ, மாணவிகளுக்கு கல்விவிழாவை மக்கள் இயக்கம் மூலம் நடத்தினார், இதற்கு சமூக ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டினர்.

இது விஜய்யின் அரசியல் வருகையின் தொடக்கம் என்று கூறப்பட்ட நிலையில், சமீபத்தில் காமராஜர் பிறந்த நாளில் தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் இரவு நேர இலவச பயிலகம் திட்டத்தை தொடங்கினார்.

இதையடுத்து, விஜய் மக்கள் இயக்கத்தில் புதிதாக பிரிவாக வழக்கறிஞர் பிரிவு தொடக்கப்பட உள்ளதாகவும்,  இந்த புதிய வழக்கறிஞர் பிரிவின் ஆலோசனை கூட்டம் சென்னையில் வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, இன்று சென்னை, பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. அதில்’’, விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச சட்ட ஆலோசனை மையம் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விஜய் மக்கள் இயக்கத்தின் மீது வழக்குகள் போடப்பட்டால் அதை சட்ட ரீதியாக அணுக அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் மீது தவறு  நிரூபிக்கப்பட்டால், மக்கள் இயக்கத்தில் இருந்து நீக்கப்படுவார்கள்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments