Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்தேவரகொண்டாவின் காதலி விஜய் பட நடிகையா?

Webdunia
வெள்ளி, 29 ஜூலை 2022 (19:23 IST)
தெலுங்கு சினிமாவில் முன்னணி  நடிகர் விஜய் தேவரகொண்டா. இவர் நடிப்பில்  பரசுராம் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான படம் கீதா கோவிந்தம். இப்படத்தில் விஜய்தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்தவர் ராஷ்மிகா மந்தனா.

இப்படத்தை அடுத்து, டியர் காம்ரேட் படத்திலும் விஜய்தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்தார். அப்போதே இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவியது. ஆனால், இருவரும் அதை  மறுத்தனர்.

இந்த  நிலையில், கரண் ஜோகரின் 'காஃபி வித் கரண்' நிகழ்ச்சியில் விஜய்தேவரகொண்டாவும், நடிகை அனன்யா பாண்டே இருவரும் கலந்துகொண்டனர். அப்போது, விஜய் தேவரகொண்டாவைப் பற்றிய கேள்விக்குப் பதில் கூறும்போது, அவருக்கும் ராஷ்மிகாவுக்கும் காதல் இருப்பதுபோன்று கூறினார்.

இதுகுறித்து விஜய்தேவரகொண்டா கூறும்போது, ராஷ்மிகா எனக்கு ஒரு  நல்ல தோழி…அவரை நேசிக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

விஜய்தேவரகொண்டா இப்படி மழுப்பலான பதிலைக் கூறியுள்ளதால், ராஷ்மிகாவுக்கும் அவருக்கும் உண்மையிலேயே காதல் உள்ளதா என ரசிகர்கர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தற்போது ராஷ்மிகா விஜய் நடிப்பில் வாரிசு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டி.ராஜேந்தர் வாய் இசையில் ‘கூலி’ படத்தில் பாடல்? - சர்ப்ரைஸ் கொடுத்த ப்ரோமோ வீடியோ!

விடுதலை 2 ஊடக விமர்சனம்: வெற்றிமாறனின் கம்யூனிச கையேடா? படம் எப்படி இருக்கிறது?

முஃபாசா படத்துக்கு பூனைக்குட்டியா? மகேஷ் பாபு ரசிகர்கள் அட்டகாசம்!

கடைசி நேரத்தில் விடாமுயற்சி படத்தில் இணைந்த பிரபலம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியது கண்டனத்துக்குரியது: இயக்குனர் வெற்றிமாறன்

அடுத்த கட்டுரையில்
Show comments