Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியன் ஸ்டைலில் மூன்று பாகங்களாக வெளிவருகிறதா வெற்றிமாறனின் விடுதலை?

vinoth
திங்கள், 26 ஆகஸ்ட் 2024 (11:33 IST)
கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியான வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் நேர்மறையான விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றது. இதையடுத்து வெற்றிமாறனின் ஹிட் பட லிஸ்ட்டில் விடுதலையும் இணைந்தது. இரண்டாம் பாகத்துக்கான ஷூட்டிங் தொடங்கி இறுதிகட்டத்தில் உள்ளது.

இரண்டாம் பாகத்தில் சூரிக்குக் காட்சிகள் மிகவும் குறைவு என்பதால் அவர் சம்மந்தப்பட்ட காட்சிகளுக்கான ஷூட்டிங் சமீபத்தில்  தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்போது விஜய் சேதுபதி சம்மந்தப்பட்ட காட்சிகளை வெற்றிமாறன் படமாக்கி வரும் நிலையில் வெற்றிமாறன் முடிவே இல்லாமல் ஷூட்டிங்கை நடத்திக் கொண்டுவருகிறார் என சொல்லப்பட்டது.

முதல் பாகத்தில் இல்லாத மஞ்சு வாரியர், கென் கருணாஸ் எல்லாம் இரண்டாம் பாகத்தில் இணைந்துள்ளனர். இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகள் அனைத்தும் எடிட் செய்யப்பட்டு போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நிறைவடைந்துவிட்டனவாம். கடைசி கட்டமாக 10 நாட்கள் ஷூட்டிங் பூந்தமல்லியில் நடக்க உள்ளதாம். அந்த காட்சிகளைப் படமாக்கிவிட்டால் மொத்த படமும் முடிந்துவிடும் என சொல்லப்படுகிறது.

ஆனால் இதுவரைப் படமாக்கப்பட்ட காட்சிகளே நான்கு மணிநேரத்துக்கு மேல் இருக்கிறதாம். அதனால் விடுதலை 2 ஆம் பாகத்தை இரண்டாக பிரித்து விடுதலை 3 ஆம் பாகமாகவும் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே விடுதலை ஒரு பாகமாக மட்டுமே உருவாவதாக இருந்து இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹேமா கமிஷனில் வாக்குமூலம் அளித்த 20 சாட்சிகள்.. சிக்கலில் திரையுலக பிரபலங்கள்..!

தனுஷின் 52வது படத்தின் டைட்டில் இதுதான்.. இசையமைப்பாளர் யார்?

நடிகைகள் குறித்து அவதூறுப் பேச்சு: மன்னிப்பு கோரினார் டாக்டர் காந்தராஜ்

அனிகா சுரேந்திரனின் லேட்டஸ்ட் வைரல் போட்டோஷூட் ஆல்பம்!

கிளாமர் உடையில் துஷாராவின் ஸ்டைலிஷான போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments