Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூரரைப் போற்று வெற்றியால் வலைவிரிக்கும் தயாரிப்பாளர்கள் – சுதா கொங்கரா குழப்பம்!

Webdunia
திங்கள், 7 டிசம்பர் 2020 (16:55 IST)
சூரரைப் போற்று திரைப்படம் ஓடிடி தளத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து அவருக்கு பல தயாரிப்பாளர்கள் அதிக சம்பளம் தர முன்வந்துள்ளார்களாம்.

தமிழ் சினிமாவில் துரோகி படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் சுதா கொங்கரா. ஆனால் இவர் மீது கவனம் பெற வைத்த திரைப்படம் என்றால் அது இறுதிச் சுற்றுதான். அதன் பின்னர் அவர் சூர்யாவை வைத்து இயக்கியுள்ள சூரரைப் போற்று திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இதையடுத்து அவர் கோலிவுட் மட்டும் அல்லாது தெலுங்கு மற்றும் இந்தி சினிமாவிலும் அவருக்கு நல்ல வரவேற்பு உள்ளதாம்.

இதனால் சூரரைப் போற்று திரைப்படத்தை ரீமேக் செய்து தர சொல்லியோ அல்லது வேறு படத்தை இயக்கவோ அவருக்கு அதிக சம்பளம் கொடுக்கவும் தயாரிப்பாளர்கள் தர முன் வந்துள்ளார்களாம். ஆனால் சூரரைப் போற்று ரிலிஸூக்கு முன்னரே சுதா அஜித் நடிப்பில் ஒரு படத்தை இயக்க ஒப்பந்தமானார். அதனால் இப்போது எந்த படத்தை இயக்குவது என்ற குழப்பத்தில் சுதா உள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

மறுபடியும் பழைய சினிமாவை நோக்கி போயிட்டோம்! திரும்ப நடிக்க மாட்டேன்! - கமல்ஹாசன் ஓப்பன் டாக்!

'தேவரா' திரைப்படத்தில் இருந்து அனிருத் ரவிச்சந்தர் இசையில் முதல் சிங்கிள் 'ஃபியர்

’இந்தியன் 2’ படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி.. ஷங்கர் அறிவிப்பு.. சிங்கிள் பாடல் எப்போது?

அந்த ஆளே பண்ணியிருக்கார் நமக்கு என்னன்னு நினைச்சேன்!.. எம்.ஜி.ஆர் குறித்து ராதா ரவி கொடுத்த ஓப்பன் டாக்!.

விஜய்யுடன் கடைசியாக நடிக்க போகும் நடிகை யார் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments