Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புஷ்பா 2 தள்ளிவைப்பால் அஜித் பட ரிலீஸ் தேதி மாறுமா? ரசிகர்கள் சந்தேகம்!

vinoth
செவ்வாய், 18 ஜூன் 2024 (11:43 IST)
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி வெளியான படம் புஷ்பா. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பேன் இந்தியா படமாக வெளியானது. கிட்டத்தட்ட 350 கோடி ரூபாய்க்கு மேல் இந்த படம் வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின.

இந்தியா முழுவதும் ஒரு பிராண்ட்டாக மாறியது புஷ்பா 2 திரைப்படம். இந்நிலையில் அதன் இரண்டாம் பாகம் மிக பிரம்மாண்டமாக தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது. அதன் படப்பிடிப்பு பல வெளிநாடுகளில் நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டாம் பாகத்தை சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இந்த படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்னும் பணிகள் முடியாத காரணத்தால் டிசம்பர் 6 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

புஷ்பா திரைப்படத்தைத் தயாரிக்கும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம்தான் அஜ்த்தின் “குட் பேட் அக்லி” திரைப்படத்தையும் தயாரிக்கிறது. புஷ்பா டிசம்பர் மாதம் ரிலீஸாகும் நிலையில் அடுத்தாண்டு ஜனவரிக்கு ரிலீஸ் திட்டமிட்டிருந்த அஜித் படம் தாமதம் ஆகுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஏனென்றால் குறுகிய இடைவெளியில் இரண்டு பெரிய படங்களை ரிலீஸ் செய்ய முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என் காசில நான் குடிக்கிறேன்.. என்னை யாரும் தடுக்க முடியாது: பா ரஞ்சித்தின் ‘பாட்டில் ராதா’ டீசர்..!

பிரேம்ஜி -இந்து தம்பதியின் தேனிலவு புகைப்படங்கள்.. இணையத்தில் வைரல்..!

’கங்குவா’ படம் பார்த்து விமர்சனம் செய்த பிரபலம்.. படம் எப்படி இருக்குது?

ரஜினியை திடீரென சந்தித்த நடிகர் சங்க நிர்வாகிகள்.. என்ன காரணம்?

’கல்கி 2898 ஏடி’ படத்தின் 4 நாள் வசூல்.. தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments