Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அல்லு அர்ஜூன் படம் டிராப்.. அட்லி அடுத்த படத்தின் ஹீரோ இவர்தான்..!

அல்லு அர்ஜூன் படம் டிராப்.. அட்லி அடுத்த படத்தின் ஹீரோ இவர்தான்..!

Mahendran

, திங்கள், 17 ஜூன் 2024 (11:45 IST)
அட்லி இயக்கும் அடுத்த திரைப்படத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பார் என்று கூறப்பட்டிருந்த  நிலையில் தற்போது அந்த படம் டிராப் செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில் அட்லியின் அடுத்த படத்தில் நடிக்க இருக்கும் நடிகர் யார் என்பது குறித்த தகவல் கசிந்துள்ளது. 
 
ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் அட்லி அதன் பின்னர் தளபதி விஜய் நடித்த தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய மூன்று சூப்பர் ஹிட் படங்களை இயக்கினார். 
 
இதனை அடுத்து பாலிவுட் சென்ற அட்லி, ஷாருக்கான் நடித்த ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கிய நிலையில் அந்த படம் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்தது. 
 
இந்த நிலையில் அட்லி அடுத்த திரைப்படத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அந்த படம் டிராப் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அட்லி அடுத்த படத்தில் சல்மான்கான் நடித்த இருப்பதாகவும் , ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகயிருக்கும் சிக்கந்தர் படத்தை முடித்ததும் அட்லி படத்தில் அவர் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எனக்கும் பொண்ணு கொடுக்க ஆள் இருக்குது: நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்ட பிக்பாஸ் பிரதீப்..!