Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்யை கலாய்க்கின்றாரா கருணாகரன்?

Webdunia
செவ்வாய், 20 மார்ச் 2018 (22:00 IST)
ஒட்டுமொத்த திரையுலகமும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் நிலையில் விஜய் நடித்து வரும் 'தளபதி 62' படத்தின் படப்பிடிப்பு மட்டும் நேற்று சென்னை விக்டோரியா மஹாலில் நடந்தது. இந்த படப்பிடிப்புக்கு சிறப்பு அனுமதி பெற்றுள்ளதாக படக்குழுவினர்கள் விளக்கம் அளித்தபோதிலும், ஒருசில தயாரிப்பாளர்கள் ஏன் இந்த சிறப்பு அனுமதி என்று போர்க்கொடி தூக்கியுள்ளனர்

இந்த நிலையில் காமெடி நடிகர் கருணாகரன், 'தமிழன்னு சொன்னா திமிர் ஏறும்' என்பது உண்மையா? இல்லை வெறும் பாட்டுக்கு மட்டும்தானா? என்று தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். மெர்சல் படத்தின் அந்த பாடலில் தமிழர்களின் ஒற்றுமை குறித்து பாடிய விஜய், நிஜத்தில் ஒற்றுமைக்கு ஒத்துழைக்காமல் படப்பிடிப்பு நடத்துவதாக அர்த்தம் தொணிக்கும் வகையில் இந்த டுவீட்டை பதிவு செய்துள்ளதாக தெரிகிறது.

கருணாகரனின் இந்த டுவீட்டுக்கு விஜய் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஒருசிலர் அச்சில் ஏற்றமுடியாத வார்த்தைகளால் கருணாகரனை அர்ச்சனை செய்து வருகின்றனர். கருணாகரன் உண்மையில் விஜய் கலாய்ப்பதற்காக இந்த டுவீட்டை போட்டாரா? அல்லது வேற அர்த்தமா? இதற்கு அவரே விளக்கம் அளித்தால்தான் இந்த பிரச்சனை தீரும்'

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’ரெடியா மாமே’.. அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் பாடல் வீடியோ ரிலீஸ்..!

சர்ச்சைக்குரிய காட்சிகள்! எம்புரானை எதிர்க்கும் சங் பரிவார்! - கேரள முதல்வர் ஆதரவு!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‘சந்தோஷ்’ ஓடிடியில் ரிலீஸ்! - நெட்டிசன்கள் தேட காரணம் என்ன?

கோலி ஒரு இந்திய வீரர்.. அதை மறந்துடாதீங்க..! - சிஎஸ்கே ரசிகர்களை கண்டித்த நடிகை!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments