Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் அரசியல் படத்தில் விஜய்?

மீண்டும் அரசியல் படத்தில் விஜய்?
, செவ்வாய், 20 மார்ச் 2018 (14:43 IST)
‘தலைவா’ படத்தைத் தொடர்ந்து மறுபடியும் அரசியல் படத்தில் நடிக்கிறார் விஜய் என்கிறார்கள். 
விஜய் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது ஒரு படத்தை இயக்கி வருகிறார். இருவரும் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம் தற்போது ‘தளபதி 62’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. கீர்த்தி சுரேஷ் விஜய் ஜோடியாக நடிக்கும் இந்தப் படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ‘மெர்சல்’ படத்தைத் தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
 
இந்தப் படத்தில் அரசியல்வாதி பழ.கருப்பையா, ராதாரவி, யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். பழ.கருப்பையா ஒரு அரசியல் கட்சித் தலைவராகவும், ராதாரவி அந்தக் கட்சியின் உறுப்பினராகவும் நடிக்கின்றனர். எனவே, இது அரசியல் படமாக இருக்கும் என்கிறார்கள்.
 
ஏற்கெனவே ‘தலைவா’ படத்தில் அரசியல் இருந்தது. அதனாலேயே அந்தப் படம் அதிமுக ஆட்சியில் பல சிக்கல்களை சந்தித்தது. அதன்பிறகு அடக்கி வாசித்த விஜய், தற்போது மறுபடியும் அரசியல் படத்தில் நடிக்கிறார் என்கிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மனைவி ஐஸ்வர்யாவுடன் தனுஷ் மீண்டும் இணையும் படம்