Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இளையராஜாவை அவமதித்துள்ளது அநாகரிகம் – திருமாவளவன் டுவீட்

இளையராஜாவை அவமதித்துள்ளது அநாகரிகம்  – திருமாவளவன் டுவீட்
, செவ்வாய், 29 டிசம்பர் 2020 (21:44 IST)
இசைஞானி இளையராஜா பிரசாத் ஸ்டுடியோவில் ஒருநாள் தியானம் செய்ய அனுமதி கேட்டிருந்த நிலையில் அவருக்கு நீதிமன்றம் அனுமதியளித்தது. ஆனால் அவரது அறையிலிருந்த பொருட்கள், விருதுகள், இசைக்கருவிகள் அனைத்தும வெளியேற்றப்பட்டதால் அவர் மிகுந்த வருத்தம் அடைந்து, அங்கு செல்லவில்லை.

இதுகுறித்து, இளையராஜா மன அழுத்ததில் இருப்பதாகவும் அதனால் அவர் பிரசாத் ஸ்டுடியோ செல்லவில்லை எனவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் இன்று இளையராஜாவின் பொருட்கள் மொத்தமும் பிரசாத் ஸ்டுடியோவிலிருந்து ஒரு லாரியின் மூலம் அவரது இல்லத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது.
தற்போது இதுகுறித்து விசிக தலைவர் திருமாவளவன் தனது டுவிட்ட பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.

அதில், #அநாகரிகம்: இசைஞானி அறையின் பூட்டை உடைத்து உடைமைகளை அப்புறப்படுத்தியுள்ளனர்.

சமூகத்தில் அவருக்குள்ள நன்மதிப்பைக்கூட கணக்கில் கொள்ளாமல் அவரை அவமதித்திருப்பது அநாகரித்தின் உச்சம் .

இவரால்தான் அந்த ஸ்டுடியோவுக்குப் பெருமை என்பதை மறந்துசெய்த நன்றி கொன்ற #இழிசெயல் @ilaiyaraajaofflஎனத் தெரிவித்துள்ளார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இளம் நடிகரின் படத்திற்கு உதவிய முன்னணி நடிகை ! வைரலாகும் வீடியோ