Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியன் 2 படத்தின் முக்கிய அப்டேட்டை பொன்னியின் செல்வன் மேடையில் வெளியிட்ட இயக்குனர் ஷங்கர்!

Webdunia
புதன், 7 செப்டம்பர் 2022 (08:39 IST)
பொன்னியின் செல்வன் ஆடியோ வெளியீட்டு விழாவில் இயக்குனர் ஷங்கர் கலந்துகொண்டு பேசினார்.

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்துக் காரணமாக மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன் பிறகு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தொடங்கி படப்பிடிப்பு நடந்து வருகிறது. அதில் கமல்ஹாசன் இன்னும் கலந்துகொள்ளவில்லை.

அவர் இல்லாத காட்சிகளை இயக்குனர் ஷங்கர் படமாக்கி வந்தார். படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நடிகை ரகுல் ப்ரீத் சிங் படப்பிடிப்பில் இணைந்தது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் நேற்று பொன்னியின் செல்வன் படத்தின் ஆடியோ ரிலீஸ் விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் ஷங்கர் படக்குழுவினரைப் பாராட்டி இந்தியன் 2 படம் பற்றிய அப்டேட்டை வெளியிட்டார். அதில் “இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்று முடிந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பு செப்டம்பரில் தொடங்கும்” எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

பிரபுதேவா ரஹ்மான் கூட்டணி அமைக்கும் படத்தின் முக்கிய அப்டேட்!

புறநானூறு வேண்டாம்… இந்த நாவலை படமாக்குவோம்… சுதா கொங்கராவை அப்செட் ஆக்கிய சூர்யா!

விஜயகாந்த் போன்ற ஒருவரை பார்க்கவே முடியாது: பத்மபூஷன் விருது வழங்கப்பட்டதற்கு ரஜினி வாழ்த்து!

கோட் படத்தின் சேட்டிலைட் பிஸ்னஸில் சொதப்பிய தயாரிப்பு நிறுவனம்… 30 கோடி நஷ்டம்?

தென்காசியில் தொடங்கிய விடுதலை 2 ஷூட்டிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments