Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இழுத்துக் கொண்டே செல்லும் இந்தியன் 2 ஷூட்டிங்.. இதுக்கு இல்லியா சார் ஒரு எண்ட்!

Webdunia
வெள்ளி, 7 ஏப்ரல் 2023 (09:01 IST)
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்துக் காரணமாக மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அந்த பிரச்சனைகளை எல்லாம் கடந்து, தற்போது இந்த படத்தை இயக்கி வருகிறார் ஷங்கர். இப்போது இந்தியன் 2 ஷூட்டிங் சென்னையில் நடந்து வரும் நிலையில் கிட்டத்தட்ட ஒருமாதம் இங்கு ஷூட்டிங் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஷூட்டிங் நிறைவடையும் போது கிட்டத்தட்ட 90 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த மாதம் முழுவதும் இந்தியாவில் இந்த பட ஷூட்டிங் நடந்த நிலையில் இப்போது அடுத்த கட்ட ஷூட்டிங்குக்காக படக்குழு தைவான் நாட்டில் முகாமிட்டுள்ளது. மே மாதத்தோடு ஷூட்டிங் மொத்தமாக முடியும் என தகவல்கள் வெளியாகின. ஆனால் இப்போது ஜூலை வரை ஷூட்டிங் செல்லும் என சொல்லப்படுகிறது. ஆனால் கமல் சம்மந்தப்பட்ட காட்சிகள் மே மாதத்தோடு முடியும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் உடையில் ஸ்டைலான போஸ்களில் திவ்யா துரைசாமி… லேட்டஸ்ட் ஆல்பம்!

கிளாமர் உடையில் ஸ்டன்னிங்கான போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

யாருக்காக ஓடுகிறதோ இல்லையோ… இவருக்காக இந்தியன் 2 ஓடவேண்டும்- சித்தார்த் நெகிழ்ச்சி!

ஒருவழியாக தான் இயக்கவுள்ள கில்லர் படத்தின் வேலைகளைத் தொடங்கிய எஸ் ஜே சூர்யா!

ஓடிடி மற்றும் சாட்டிலைட் வியாபாரத்தில் சாதனை படைத்த ஜெயம் ரவியின் ‘பிரதர்’ திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments