Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியன் 2 ஓடிடி ரிலீஸ் எப்போ?... வெளியான தகவல்

vinoth
திங்கள், 29 ஜூலை 2024 (17:50 IST)
கமல்ஹாசன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில்  எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸான இந்தியன் 2 திரைப்படம் படுமோசமான விமர்சனங்களை சந்தித்துள்ளது. இதுவரை ஷங்கர் கேரியரில் இல்லாத அளவுக்கு மோசமான வசூலையும் பெற்று வருகிறது.

மோசமான விமர்சனங்களாலும், கேலிகளாலும் படத்தில் இருந்து 12 நிமிட நேரத்தைக் குறைத்தனர். ஆனால் அப்போதும் அந்த படம் ரசிகர்களை தியேட்டருக்குள் ஈர்க்கவில்லை. இந்நிலையில் இந்தியன் 3 மீது ரசிகர்களுக்கு இருந்த எதிர்பார்ப்பு அப்படியே படுத்துவிட்டது.

அதனால் இந்தியன் 2 வில் செய்த பிழைகளை சரிசெய்து இந்தியன் 3 படத்தை மெருகேற்றி எப்படியாவது அந்த படத்தை ரசிகர்களுக்கு பிடிக்கவைத்துவிட வேண்டும் என கமலும், ஷங்கரும் முடிவு செய்துள்ளார்களாம். அது சம்மந்தமான சமீபத்தில் இருவரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. 

இதற்கிடையில் இப்போது திரையரங்கில் இருந்து தூக்கப்பட்டுள்ள இந்தியன் 2 திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆவது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்தியன் 2 திரைப்படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் ஆகஸ்ட் 15 முதல் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹேமா கமிஷனில் வாக்குமூலம் அளித்த 20 சாட்சிகள்.. சிக்கலில் திரையுலக பிரபலங்கள்..!

தனுஷின் 52வது படத்தின் டைட்டில் இதுதான்.. இசையமைப்பாளர் யார்?

நடிகைகள் குறித்து அவதூறுப் பேச்சு: மன்னிப்பு கோரினார் டாக்டர் காந்தராஜ்

அனிகா சுரேந்திரனின் லேட்டஸ்ட் வைரல் போட்டோஷூட் ஆல்பம்!

கிளாமர் உடையில் துஷாராவின் ஸ்டைலிஷான போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments