Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கங்குவா படத்தில் கார்த்தி நடிப்பது உண்மைதான்… படத்தில் பணியாற்றிய கலைஞர் உறுதி!

vinoth
திங்கள், 29 ஜூலை 2024 (17:46 IST)
சூர்யா நடிப்பில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உருவாகி வரும்  கங்குவா படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிரார்.  இந்த கதை நிகழ்காலம் மற்றும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலம் என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து முடிந்துள்ள  நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

படம் 10 மொழிகளில் ரிலீஸ் ஆகவுள்ளதாக சொல்லப்படுகிறது. ஷூட்டிங் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வரும் நிலையில் படத்தின் ரிலீஸ் அக்டோபர் 10 ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது படத்தின் பிஸ்னஸை தொடங்கியுள்ளது தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் நிறுவனம்.

இந்நிலையில் இந்த படத்தின் இறுதியில் கார்த்தி ஒரு சிறப்புத் தோற்றத்தில் கார்த்தி நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. அது ஒரு எதிர்மறைக் கதாபாத்திரம் எனவும் சொல்லப்பட்டது. இந்நிலையில் அதற்கான ஷூட்டிங் சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் நடைபெற்றதாகவும் சொல்லப்பட்டது. இந்நிலையில் படத்தில் பாடல் எழுதியுள்ள பாடல் ஆசிரியர் விவேகா இந்த தகவலை உறுதி செய்துள்ளார். சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் அவர் இதைப் பகிர்ந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இளம் பெண்ணுக்கு லிப் கிஸ்.. விளக்கம் அளித்த 70 வயது தமிழ் பாடகர்..!

ரஜினி, விஜயகாந்த் படங்களை தயாரித்த தயாரிப்பாளர் காலமானார்! - திரை பிரபலங்கள் இரங்கல்!

இத்துணூண்டு முத்தத்துல இஷ்டம் இருக்கா..? செல்பி எடுக்க வந்த ரசிகையை லிப் கிஸ் அடித்த உதித் நாராயண்! - வைரலாகும் வீடியோ!

தனுஷின் ‘இட்லி கடை’ ரிலீஸ் தேதி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

கண்கவர் கருநிற உடையில் அட்டகாச போஸ் கொடுத்த தமன்னா!

அடுத்த கட்டுரையில்
Show comments