Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிரி புதிரி ஆக்‌ஷன் காட்சிகள்… இன்று முதல் தென் ஆப்பிரிக்காவில் இந்தியன் 2 ஷூட்டிங்!

Webdunia
செவ்வாய், 11 ஏப்ரல் 2023 (08:51 IST)
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்துக் காரணமாக மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அந்த பிரச்சனைகளை எல்லாம் கடந்து, தற்போது இந்த படத்தை இயக்கி வருகிறார் ஷங்கர். இப்போது இந்தியன் 2 ஷூட்டிங் சென்னையில் நடந்து வரும் நிலையில் கிட்டத்தட்ட ஒருமாதம் இங்கு ஷூட்டிங் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஷூட்டிங் நிறைவடையும் போது கிட்டத்தட்ட 90 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக தைவானில் நடந்த ஷூட்டிங்கை முடித்து விட்டு அங்கிருந்து தென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ளது. இது சம்மந்தமான புகைப்படங்களை படக்குழு பகிர்ந்துள்ளது.  இன்று முதல் அங்கு 12 நாட்கள் ஷூட்டிங் நடக்க உள்ள நிலையில் பிரம்மாண்டமான ஒரு ஆக்‌ஷன் காட்சியைப் படமாக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவில் இருந்து கமல்ஹாசனின் புகைப்படங்கள் வெளியாகி வைரல் ஆகி வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

சமந்தாவின் லேட்டஸ்ட் கிளாமரஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments