Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்தடுத்து ரிலீஸ் ஆன பிரபாஸ் படத்தின் மேக்கிங் வீடியோக்கள்

Webdunia
செவ்வாய், 11 ஏப்ரல் 2023 (07:56 IST)
பாகுபலி புகழ் பிரபாஸ் நடித்துவரும் 21 வது படம் குறித்த அதிரடி அறிவிப்புகள் சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகின. கீர்த்தி சுரேஷ் நடித்த ’நடிகையர் திலகம்’ என்ற ஹிட் படத்தை இயக்கிய இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கும் இந்த படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நாயகியாக நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும் நடிக்க உள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது நடந்து வரும் நிலையில் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

அடுத்த ஆண்டு சங்கராந்தியை முன்னிட்டு ஜனவரி 12 ஆம் தேதி இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக பிரபாஸின் ஆதிபுருஷ் திரைப்படம் ஜூலை மாதத்தில் ரிலீஸ் ஆகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்போது இந்த படத்தின் மேக்கிங் வீடியோக்கள் இரண்டை படத் தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் படத்தின் தீம்-ஐ சொல்லும் விதமாக உருவாக்கியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘ஆண்பாவம்’ புகழ் பழம்பெரும் நடிகை கொல்லங்குடி கருப்பாயி காலமானார்!

மாமன் படத்துக்கு வெற்றி விழா கிடையாது… நடிகர் சூரி சொல்லும் காரணம்!

‘புல்லரிக்குது தம்பி. என் அப்பா ஞாபகம் வந்துடுச்சு’.. டூரிஸ்ட் பேமிலி இயக்குனரைப் பாராட்டிய ஆட்டோ ஓட்டுனர்!

இயற்கை சீற்றத்துக்கு மத்தியில் ‘மதராஸி’ படத்தின் ஷூட்டிங்கை முடித்த முருகதாஸ்!

இந்த பிறந்தநாளுக்கு எந்த அப்டேட்டும் கிடையாது… விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments